காதலின் ஏக்கத்தோடு
பெய்த மழையை விடவா
இப்பொழுது ஊரில்
மழை பெய்து
கொண்டு இருக்கிறது
இல்லை
தீராத கண்ணீர்
நிரம்பிய இதயம் எல்லாம்
மின்னல் கீற்றாய்
உன் ஞாபகம் அன்பே!! 1491
சின்னஞ்சிறு கனவுகளே
வளர்க்கிறது
நம் காதலின் ஆயுளை... 1492
யாரும் இல்லாத போது
உன்னை நினைத்து
கண்ணீர் விட்டுக் கொள்கிறேன்
ஏன்எனில்
அவர்களுக்கு
சொன்னாலும் புரியாது
உன் காதலை பற்றி... 1493
மனம் என்ன கேட்க போகிறது
இந்த மழையில்
குளித்து கொள்ள
நீ வேண்டும்
என்பதை தவிர... 1494
காலமும் கருகுமோ
காதலின் வேதனையில்
மோகமும் பெருகுமோ
காதலின் சாதனையில்
கண்களும் ஏங்குமோ
உன் கண்ணின் சாயலை
கண்டு உருகிட என் உயிரே... 1495
மெளனங்களை வார்த்தையாக்கி
வார்த்தைகளை கவிதையாக்கி
கவிதையை காதலாக்கி
காதலை உயிராக்கினேன்
உனக்காய் என் உயிரே... 1496
எங்கிருந்தாலும்
உன்னை நினைத்துக் கொள்வேன்
என்பதை விட
எங்கோ இருந்தாலும்
உன்னை அனைத்துக் கொள்வேன்
இக்கவிதையின் வழி... 1497
எண்ணங்கள் எளிமையாக
இருந்தாலும்
அதன் வண்ணங்கள்
முழுதும்
உன் காதலே நிறைந்துள்ளது.. 1498
நிலாவை பார்த்து
உன்னை நினைத்தேன்
நீயும் என்னைத் தேடி
இரவில் கரையும் போது.. 1499
கால் வலிக்க நடந்தாலும்
காதல் இருக்க வேண்டும்
கண்கள் முழுதும்
இறைவனை நினைத்து
இவ்விரவு முழுதும்... 1500
No comments:
Post a Comment