இரவை ருசித்திடும்
இன்னும் ஓர்
கனவு வேண்டும்
உன்னோடு மட்டும் அல்ல
உன் இதழோடும்.. 1421
மல்லிகை மலர் கொடுத்தாய்
உன் இதழின்
மயக்கத்தில்
நான் என்னை கொடுத்தேன்.. 1422
உன் கண்ணை
பார்ப்பது போல தான்
தோன்றுகிறது
அதற்குள் முத்தமிட்டு
செல்கிறது
உன் கண்கள்.... 1423
ஒளிரும் நிலவுக்கு கூட
தெரியவில்லை
நீ அதை விட
ஒளி மிகுந்தவள் என்று! 1424
பூக்களோடு பேசிக்
கொண்டு இருக்கிறாய்
நானோ
காதல் பூவை
சுவாசித்துக் கொண்டு
இருக்கிறேன்.... 1425
உன் மெல்லிடை
காட்டும் சேலைகளுக்கு
எல்லாம்
நான் நித்தம்
சேவை செய்ய
கடமை பட்டு இருக்கிறேன்... 1426
குறிப்பிடும் படியான
அர்த்தங்கள்
இல்லாத போதும்
இக்கவிதைகள் அனைத்தும்
உனக்கு மட்டுமே
என்னைப் போல! 1427
அறுபட்ட இடத்திற்கு
தையல் போடுவதை போல
உன்னை பிரிந்து
வாழும்
இவ்வேதணைகளுக்கு
தையல் போடுகிறது
இந்த கவிதை!! 1428
நேரம் பார்ப்பதில்லை
கண்கள்!
உன்னோடு பேசிக்கொள்ள
நான் மட்டுமே
இருக்கும் நேரம்... 1429
எனக்காய்
பெய்து கொண்டு இருக்கிறது
உன் முத்த மழை!!
உனக்காய்
பெய்து கொண்டு இருக்கிறது
இங்கு
ஓர் கவிதை மழை!! 1430
No comments:
Post a Comment