உன் விரல் கூட
முத்தமிடுவதை
நானும் உணர்ந்தேன்
யாரும் பார்க்காத போது
என் பாதத்தை
அது வருடும் போது... 1381
நீ இன்றி
வாடும் காதல் பூ
நான்
அன்பே!
நீ இன்றி
வாழும் காதல் பூவும்
நான்... 1382
உன்னை எதிர்பார்த்து
காத்திருந்ததை விட
உன் முத்தத்தை
எதிர்பார்த்து
காத்திருக்கும்
நொடிகள் ஏனோ
மிகக் கொடியது
என் அன்பே!! 1383
உன்னைத் தேடி
அலையும்
பாக்கியம் இல்லாத போதும்
உன்னைத் தேடியே
என் இரவு
வாழ்க்கை பயணிக்கிறது
என் அன்பே!! 1384
உன்னை பார்க்காத
நொடியில்
உன் பார்வையே போதும்
என்று நினைக்கிறேன்
உன்னை பார்த்த பின்பு
பாதி முத்தமாவது வேண்டும்
என்று துடிக்கிறேன் ..... 1385
வண்ண விளக்குகள்
வேண்டும் அன்பே!
பல வண்ணம் மிகுந்த
உன் கண்ணை கண்டு
நான் கவிதை எழுத
கவிதையோடு
உன் காதலையும் வருடி விட.. 1386
உன்னைப் பார்த்த பின்பு
எழுத ஆரம்பித்த
கவிதைகள் எல்லாம்
அத்தனை அழகு!!
அழகிற்கு இணை
அழகு மட்டுமே!
உன் இதழுக்கு இணை
என் இதழ் மட்டுமே!! 1387
ஏன் என்று
கேட்காதே!!
என்னிடம் இருப்பது
உனக்கான இதயம்
மட்டும் அல்ல!
இதழும் தான்... 1388
முதல் முறை முத்தமிட்ட போது
தள்ளி விட்டாய்!
இப்போதோ
தள்ளி நின்றே
முத்தமிடுகிறாய்!
பல முறை!!! 1389
பாதி உறக்கத்தில்
நீ எழுந்து
உன் உடையை
சரி செய்தால்
நான் எதை
சரி செய்வேன்?
என் இதழையோ!! 1390
No comments:
Post a Comment