இந்த இருளில்
நம் இருவரால்
தொலைக்கப் பட்ட காதலை
நம் இருவரும்
தேடிக் கொண்டு இருக்கிறோம்
வெவ்வேறு இடங்களில் இருந்து
ஒரே ஒரு வெளிச்சம்
கொண்டு "காதல்" 1441
வருத்தத்தில்
நான் பாடவில்லை
என் கண்ணே!
உன் வரவை
எதிர்பார்த்து தான்
பாடிக் கொண்டு இருக்கிறேன்.. 1442
இரவும், பகலும்
இதயத்தில் உன் முகம்
இசையெங்கும் உன் குரல்
உன் குரலின் நாதமாய்
காதலே ஒலிக்கிறது
இரவை பகலையும் மீறி.. 1443
என் இளமை பெருக்கும்
இரவே!
இன்று என் உயிர்
உறங்கட்டும்
உறக்கத்தின் கனவில்
காதல் பெருகட்டும்
இரவின் இளமையோடு!! 1444
உன் புன்சிரிப்பில்
என்னை
வானை ரசிக்க வைத்துவிட்டாய்
கண்களை மூடியபடி
கைகள் உன்னை
தழுவிய படி... 1445
வானம் என்பது
பூமியின் பிரதிபலிப்பு
உன் புன்னகை
என் முத்தத்தின்
பிரதிபலிப்பு.... 1446
நீ பார்க்கும் போது
காதல் பெருகுகிறது
வெட்கத்தில் நீ சிரித்தால்
காமம் உடைகிறது... 1447
வாடி நின்ற போதும்
வாடாமல் வரிகள்
மட்டும்
உன்னைத் தேடியே
வந்து கொண்டே
இருக்கிறது
என் இதயத்தில் இருந்து.. 1448
நிலவை ரசித்தேன்
உன் கண்ணை
நிலவாக பாவித்து... 1449
உன் ஞாபகம் மட்டுமே
நிரப்ப
இந்த கவிதை கோப்பை
காத்திருக்கிறது... 1450
No comments:
Post a Comment