April 28, 2013

அப்பாவும் அம்மாவும்

என் தாயையும் தாய் போல் கவனிக்கும் தந்தை நீங்கள் , உங்களின் உயிர் துளியில் பிறந்த நாங்கள் ஐவரும் இன்று உங்கள் வேர்வைத்துளியில் வளர்கிறோம். நீங்கள் படித்ததை இது வரை பரைசாற்றியது இல்லை,ஆனாலும் எங்களை படிக்க வைத்தீர்கள்.
உங்கள் இடைவலியில் கூட இடைவிடாமல் உங்கள் வேர்வைத் துளியால் எங்களை வளர்க்கிறேர்கள்.
எங்களின் உதிரம் கூட போதாது உங்களின் பாதம் கலுவுவதற்க்கு.
எங்களது மார்பை சேர்த்து அணைக்கவில்லை என்றாலும் மனங்களில் சேர்த்து அணைக்கிறேர்கள் ஒவ்வொரு முறையும்.
காலைச் சூரியன் கூட பின் தொடர மறந்தாலும் நிழல்லாக பின் தொடர்கிறேர்கள் ஒவ்வொரு நாளும்.
தண்ணீரில் ஊறிய சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டாலும் எண்ணெயில் ஊறிய சாப்பாட்டை உண்ண சொல்கிறேர்கள்.
எந்த நாள் என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன், உங்கள் உழைப்புக்கு விடுமுறை கொடுக்க..
அம்மா என்ற வார்த்தையில் அனைத்தும் அடங்கும் அன்பு,பாசம்,பரிவு. அன்பில் அரைவனைக்கும் அம்மா, கோவமான பாசத்தை வெளிப்படுத்தும் அம்மா.
அதனால் என்னவோ உன் பெயரில் கூட பேச்சியம்மாள் என்று வைத்திருக்கிறார்கள் போல்.
சமைப்பது மட்டும் வேலை என்று இல்லாமல், குடும்ப பிரச்சினைகளையும் அழகாக சமாளிக்கிறாள் என் அன்பு அம்மா.
வீட்டை கூட கூட்டமாட்டாள், ஆனால் வெயிலில் நெற்களை கூட்டுகிறாள். அது தான் எங்கள் அம்மா.
-Sun Muga-
30-04-2013 23.28

April 26, 2013

நிசப்தம்

நீ என்னை காணும் போது வெட்கம் கொள்கிறாயா? இல்லை வெட்கத்தை கொல்ல எண்ணுகிறாயா? என் காதலை உன் கையில் கொடுத்து என் கையால் உன் இதழை பிடித்து நம் காதலை இதமான காதலா மாற்ற எண்ணுகிறேன்.

நீயும் நானும் அமர்ந்து பேசிய இடத்தில் புதிதாய்ஒரு பூ பூத்திருக்கிறது. அது என்ன பூ என்று யோசிக்கிறாயா?அது தான் காதல் பூ.

உன் மூச்சுக்காற்றை கொள்ளையடித்து உன் கை விரல் தீண்டி உன் மூச்சு காற்றை கொண்டு மறு ஜென்மம் நான் எடுக்க எண்ணுகிறேன்.

உன் அன்பை கொஞ்ச நேரம் பரித்து உனக்கே பரிசாக கொடுக்க எண்ணுகிறேன்.

நீ முதுகு வலிக்குடா என்று சொல்லும் போதெல்லாம் முத்தம் கொடுடான்னு நீ சொல்ற மாறியே எனக்கு கேட்கும்.

சரி, அப்படின்னு முத்தம் கொடுத்த நீ அய்யோ!!!! இப்ப உடம்புலெல்லாம் வலிக்கேடான்னு,செல்லமா சொல்லி ஒரு சின்ன சினுங்கலும் விட்டு விடுவாய்.

எழுதி பார்க்கிறேன் உனக்காக ஒரு கவிதை;

என் காதலும் நீ,
என் காதலியும் நீ,
என் காலையும் நீ,
அந்தியில் பொழியும்
மழையும் நீ,
கொளுத்திய
வெயிலும் நீ,
நான் போர்வைக்குள்
போர்த்திய குளிரும் நீ,
நான் உடுத்திய
உடையும் நீ
என்னை படுத்திய
நினைவும் நீ,
ஆழ மரம் இல்லாத
அகலமான நிழல் நீ
நதி நீர் நீ,
நான் பருகும்
குடிநீர் நீ,
வழிந்தோடும்
வேர்வையும் நீ,
என் காதலின்
வேர் நீ...

காதலை மையமாக
கொண்டு கவிதை
எழுத ஆசையில்லை
உன்னை மையம்
கொண்டே கவிதை
எழுத ஆசை..

நான் இல்லை,
நானாக இல்லை,
இன்று உன் காதலால்
துயரமும் இல்லை,
வலியும் இல்லை,
ஆம் உன் அன்பை
பற்றி சொல்ல என்னிடம்
வார்த்தையும் இல்லை.

நீ என்னிடம் இல்லை,
ஆனால் இருக்கிறாய்
என் உயிராக
என்னுள் ஒலி
எழுப்பிக்கொண்டே..

நீயும் கதறுகிறாய்
கதவோரம் நின்ற படி,
யாரும் காணாமல்,
நான் காணாமல் போன
பாதையை பார்த்தபடி,

உன் வீட்டு படியும்
கதறியது உன் பாதம்
என் பாதத்தை உரசியபடி
பிரியும் போது...

நான் ஒழிந்த ஒளியில்
உன் விழி மட்டும்
என்னை கண்டு
கண் கலங்குகிறது
விடியலில்லாவது விடியல்
வருமா? என்று.

உன் காதல் புனிதமானது
என்பதை எத்தனை முறை
நிருபித்திருக்கிறாய்.

காதலை கொடுத்தாய்,
உன் தூக்கத்தை தொலைத்தாய்,
உன் ஏக்கத்தை வளர்த்தாய்,
உன் விடியலயும் மறுத்தாய்,
மறுஜென்மம் எடுத்தாய்,
கனவால் எழுந்தாய்,
மோகம் கொண்டாய்,
கோவமும் கொண்டாய்..

இப்படி எத்தனை எனக்காக,
போதும் என் உயிரே
உன் காதல் போதும்
இந்த உலகத்தில் நான்
வாழ, வளர!!!!

-SunMuga-
11-05-2013 22.26 PM

April 23, 2013

புத்தகம்

நான் குளித்த பின்பும்
உன் புத்தக வாசனை

இது என்ன புத்தகம்
விழியை பலி
வாங்குகிறதோ
உறங்கவிடாமல்

படித்த வரிகள் எல்லாம்
படியாமல் அர்த்தத்தின்
ஆழம் படிகிறது.

படித்த கவிதை தான்
கவிதையாக பிறக்கிறது
மறுஜென்மம் எடுத்து..

விட்டுபோன வரி கூட
பட்டுப் பூச்சி போல
உருமாறுகிறது..

April 20, 2013

Lovers

மூடி மறைத்த முகம்
நாள் தோறும் இவன்
தேடிய முகம்,

ஒரு நாள் இரவும்
பகலும் பகிரும்
நேரம் சந்திக்க
காதல் பூத்தது..

காணமல் பேச
கண்களால் கவிதை
அமைக்க என
காலம் நகர்கிறது

உன்னை விட உன் காதலை
பற்றி சொல்ல,
ஏழு ஜென்மம் போதாது.
முதுமை காதலில்
ஏற

இவர்களோடு இளமை
உறவாட இனிமையான
காதலும் வளர்கிறது.

ஒரு நாளும் மறந்ததில்லை
இவன் இவன் காதலை
சொல்ல...

காலையில் எழுவான்
தன் காதலை
சொல்வான்...

யாரிடம் என்று
உற்றுப் பார்த்தால்
யாருமே இல்லை
இருந்தது அவன்
காதல் மட்டும் தான்.

அவன் சொன்ன விதம்
மிகவும் அரிது

கனவுக்குள்ளே அவள்
கைவிரலை பிடித்து
கண்களை பார்த்து
கவிதையாக பேசிய
படி தன் காதலை
வெளிப்படுத்தினான்

எழுந்தவனை ஏண்டா
இப்படி உளருகிறாய் என்று கேட்டால்?

உளரும் அளவிற்கு
ஏதும் நடக்கவில்லையே
என்று தனியாக
சிரிக்கிறான்..

இப்படி இவனுள்
காதலை விதைத்தவள்
எப்படி இருப்பாள்
என்று யூகிக்ககூட
முடியவில்லை.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கோணத்தில்
சிரிக்கிறான், ரசிக்கிறான்..

பூவை பார்த்து
சிரிப்பதால்,
மென்மையோ இவள்..

காற்றை பார்த்து
ரசிப்பதால் இவன்
சுவாசமோ இவள்!!!

விடிந்த விடியலை
ரசிக்கிறான்;

உதித்த சூரியனை
ரசிக்கிறான்;

எழுந்த கடல் அலையை
ரசிக்கிறான்;

நடந்து சென்ற குழந்தையை
ரசிக்கிறான்;

இவள் நடந்த பாதையை
ரசிக்கிறான்..

இப்படியே இவன் காதலையும்
வளர்த்துக் கொள்கிறான்
தினமும்....

-§un Muga-
26-05-2013 20.42 PM

நிகழ்ந்த நிகழ்வுகள்

உன்னை பார்த்துக்கொண்டே இருந்திருக்கலாம்
அந்த முதல்
முத்தத்தின் முடிவில்..

கூச்சம் கொண்டேன்
காதலை சொல்ல,
அச்சம் கொள்கிறேன்
காதலை சொன்ன
பின்பு..

நீயும் நானும் தனிமையில்
இருந்த நொடிகள்
எல்லாம் தனிமையில்
வாட்டுகிறது...

நான் வாங்கி கொடுத்த
சேலையை உடுத்தி
நீ ரசித்ததோ என்னையே..

நாம் உண்ட உனவில்
முதல் இடம்
பிடித்தது கேரட்
இதழ் வழி...

இருளில் இறுகிய
வார்த்தைகள் -எங்குமே
இடம் பெறாது...

என்னை வழியனுப்பி
நீ வடித்த கண்ணீரை
நானும் கண்டு
இருக்கிறேன் ஒரு சில
நாளில் நான் உண்ட படி

-SunMuga-
20-04-2013 4.58 AM

April 18, 2013

புரியாத கவிதை

01. நீ நான் காதல் இது
      தான் நம் வாழ்க்கை
02. சுடர் நீ என்னுள் எறியும்
      காதலுக்கு அதையும் அறியாது
03. வானத்தின் வண்ணம் நீ என்
      எண்ணத்தின் மென்மை நீ
04. பிறர் கான நீ இல்லை
      நான் கான மட்டுமே..
05. நெடுஞ்சொல் நீ சொல்ல நெடு
      நேரம் நான் கேட்டுருந்தேன்
06. நயமுடன் நீ பழகுகிறாய் நயமாய்
      நான் பார்த்த பின்பு.
07. பருகிய காதல் பரிதவிக்கிறது உன்னை
      கண்டும் காணாத நாட்களில்
08. நின்ற பொழுதுகள் எல்லாம் நிழலாய்
     வருகிறது நினைவே உனக்காக
09. நேரம் போகிறது நெருங்கி வா
      ஒரு கவிதை அமைக்க
10. உன்னுள் மையமிட்ட காதல் என்னையே
      மெய் மறக்க செய்கிறதே
11. நேற்றைய கனவு இன்று பலிக்குமா
      நிரந்தரம் ஆகுமா நாளை
12. எடுத்த உடையும் சிறந்த நடையும்
      உனக்கே உண்டான சொத்து
13. விரல் பிடித்தாய் புன்னகை பூத்தது
      மனமே என் காதலே
14. நீ நெஞ்உருகி நின்றாய் என்
      நிழலை பார்த்த படியே
15. தெரு ஓரம் நின்றேன் தேவதையே
      தினம் உன்னை காண
16. வெறும் கண்ணில் நீர் கோர்த்தபடி
      நீ பார்க்க வெளுத்துபோனேன்.
17. வாங்கிய முத்தத்தை உனக்கே பரிசாக
      அளித்தேன் அதிலும் அழுத்தமாக
18. நேற்று சந்தித்து இன்று வரை
      நீளுகிறது உன் காதல்
19.  நீதானே அது புடவை புன்முருவல்
      எது உன்னுள் சிறந்தது
20. பல நாள் தவம் கண்கள்
      சந்திக்க தினமும் சிந்திக்க
21. நான்கு பக்கமும் உற்றுப் பார்த்தால்
      உன் முகம் இவ்வுலகில்
22. இரு கரம் இணைவது எந்நாள்
      உதிரமே என் உயிரே
23. நீயும் நாணும் சேர்ந்து உலரும்
      தருணம் தான் காதல்
24. விளக்கமே வேண்டாம் உன்னுள் இருப்பது
     காதல் தான் கண்ணில்
25. வேண்டுமென்றே வேலை செய்வாள் அவள்
     வேர்வையை நான் தொடைக்க
26. உன் நெற்றியின் பொட்டு வட்டமாய்
      என் இதயத்தில் வட்டமிடுகிறதே..
27. இரு விழிகள் பார்ப்பது உன்னை
      மறந்தது என்னை அந்நாள்
28. நேசித்தது உன்னை சுவாசித்தது உன்
      மூச்சுக் காற்றை அந்நாள்.
29. இரவை இரவல் வாங்கியாது உன்னோடு
      நான் இருக்க வேண்டும்.
30. வேறெங்கும் செல்ல விருப்பமில்லை உன்னோடு
      இருக்கும் நாட்களில் நனையாமல்.
31. நெஞ்சே நிரந்தரம் நீ என்னுள்
      இதயத்தின் ஓசை கேட்கும்வரை.
32. நிழல் காணும் போது நீ
      தான் பின் தொடர்கிறாய்.
33. தினம் உந்தன் குரல் எனக்கு
      ஒரு திருக்குறள் அழகே..
34. நிஜம் உன்னை காதலிப்பது உண்மை
      உன்னை நேசிப்பது இந்நாளில்.
35. நீ என்று ஒரு பெண்னை
      பார்த்தேன் துயரம் அன்று.
36. சோதித்துப் பார்த்தேன் என்னை உன்னை
      காணாமல் இறந்தேவிட்டேன் அன்று
37. நன்கு நாம் அறிவேன் நீ
      இருப்பதை இதயம் துடிக்கும்போது.
38. உறங்கிய விழி வலியில் துடிக்கும்
    இடைவெளி இல்லாமல் இல்லாதபோது.
39. அயர்ந்து நீ தூங்க நான்
      பார்த்தேன் என் அழகை.
40. கேள்விக் குறி போடும் விழி
      தான் பதில் ஆச்சரியகுறிக்கு.

April 17, 2013

நகரமும்- நரகமும்

நகரத்தில் நகர்வதை
விட நரகம் மேல்,

பின்னிய அன்பை
பிரித்தெடுத்து-பின்நாளில்
நடிப்பு மட்டுமே மிஞ்சும்
போல..

நாய் கூட நடுவீட்டில்
உண்ண நாளைய
நாயகன் நடுத்தெருவில்
உண்ணுகிறான்.

போரட்டம் பல நடந்த
கடற்கரை கூட
காமத்தில் கரை
ஒதுங்கியுள்ளது.

வறுமையுள்ள உள்ள
உடையில் தள்ளாடும்
பெண்கள், வறுமையுள்ள
பெண்ணிடம் கூத்தாடும்
ஆண்கள் என பல...

பாவப்பட்ட பார்வை
பட்டால் அது தான்
மிகப்பெரிய பாவம்..

பணம் மட்டுமே அறிந்த
மிருகமும் இங்கே,
பணமே அறியாத
மனிதனும் இங்கே..

வாழத்தெரிந்தவன் வாழ்கிறான்,
வாழத்தெரியாதவன் வீழ்கிறான்.

வான்நோக்கி
பெருகி போன கட்டிடங்கள் ,
மிககுறுகிபோன குடும்பங்கள்
என பல வரிசை படுத்தலாம்.

-SunMuga-
17-04-2013 10.23 PM

கண்ணீர்

நான்
ஊதிய துன்பம்
இறந்தாலும் நம்மை
விட்டு போகாதோ?

வரைந்த வட்டத்துக்குள்
ஓர் வாழ்க்கை,
விழாமல் விழுகிறது
கண்ணீர் ...

தவறை தவறாமல்
செய்யும் நான்,
தவறி தவறி
என்னையை அடைகிறாய்
நீ....

நீ தான்
வடிக்கிறாய் கண்ணீர்,
நான் தானே வளர்க்கிறேன்.

பொய்த்து போன
ஓர் வாழ்க்கையில்
போவது ஒரு துளி
கண்ணீர் தான் விழியில்
இந்த உயிர் பிரியும் வரை.

பிரிந்த கனம் சேர
இதற்க்கு மேல்
என்ன செய்வாய் நீ?
என் மேல் உள்ள
பிழையால்.

பிழை என்று தெரிந்தும்
பிள்ளையை காயப்படுத்தும்
தகப்பனோ நான்?

பேய் ஒன்று கழுத்தை
நெறிக்க இறந்தாவது
போய்யிருக்கலாம் அந்த
கனவின் முடிவில்...

-SunMuga-
17-04-2013 9.33 PM

April 16, 2013

Pothiraju N

Sun Muga blog; இது எனக்கான இடம் நான் இதில் என்னை பற்றியும் என்னை சார்ந்தவர்களை பற்றியும் எழுத ஆசைப்படுகிறேன் என்பதை விட பேராசை படுகிறேன் என்றே சொல்லலாம்.

பொக்கிஷ போத்தி;

விதி என்று ஒன்றும் இல்லை நம் விதை தான் அது.

இவர் சொல்லாமல் சொல்லிய பாடம் இது..

வாழ்க்கை ஒரு மனிதனின் பயணம் என்றால்? அந்த பயணத்தில் தன் அப்பா,அம்மாவை தவிர எந்த ஒரு மனிதன் நிலையாக இருக்கிறான்?
அப்படி பட்ட ஒரு சாதரண மனிதன் தான் இவரும்.

பிடித்துஎழுதும் பேனாவும்
ஒரு விதம்;
எடுத்து உரைக்கும் உரையும் தனி விதம்;

நடந்ததை கண்டுகொள்ளாமல்
நடக்க வேண்டியதை எண்ணி
நடக்க ஆரம்பிப்பார்.

நாகரிகம் புதிது.நண்பனின் நடு உச்சியில் கொட்டும் அளவு.

உழைப்பின் ரகசியம் மட்டும்
ரகசியமே;

பொறுமையை கண்டால்
நமக்கே பொறாமை
பிறக்கும்..

கோபம் கொள்ளும்போது
நம் தவறை கொன்றுவிடுகிறார் .

வெறுத்து வேலைப்பார்ப்பார்
கால நேரங்களை மட்டும்.

நான் சம்பாதித்த நல்ல பெயர் இவரை சேரட்டும்..

என்னை ஏற்றுக்கொண்ட தவறுகள் என்னையே சேர்ந்து இருக்கட்டும் .

-SunMuga-
16-04-2013 11.20 PM

கேள்வியும் பதிலும்

நீ யார்?
நான் காதலன்.
யாரை காதலிக்கிறாய்?
என்னவளை தான்.
உன்னவள் என்றால்?
என் உயிர்.
உயிர் உன் கையில் இல்லையே?
அது தான் உண்மை.
புரியலயே?
என் உயிர் வாழ்வது
என் கண்ணில்,
என் மூச்சில்,
என் பேச்சில்,
என் விரலில்,
என் கால்களில் ,
என் இதயத்தில்,
என் உதிரத்தில்,
என் எழுத்தில்,
என் எண்ணத்தில்,
என் ஏக்கத்தில்,
என் தூக்கத்தில்,
என் கனவில்,
என் நினைவில்,
என் இரவில்,
என் பகலில்,
என் துயரத்தில்,
என் இன்பத்தில்,
என் மென்மையில்,
என் உண்மையில்,
என் நேசத்தில்,
என் பாசத்தில்,
என் அன்பில்,
என்று ஒவ்வொன்றிலும்
என்னவள் வாழ்கிறாள்...

நான் படித்த கவிதைகள்
எல்லாம் இவளின் நகலே
என்று தோன்றும்.
உண்மைதானே சுயம் என்னோடு வாழ்கிறதே!!!

-SunMuga-
16-04-2013 22.43 PM

யார் இவள்?


நான் தின்ற முகம்,
என்னால் துடித்த இதயம்,
என்னுள் ஒடும் குருதி ,
என்னை பார்க்கும் விழி,
என்னால் ஏற்படும் வலி,
உன்னுள் கலந்த காதல்,
இது தான் நம் வாழ்வின்
முதற்படி.


யாரும் அறியவில்லை;
அறிவில்லாதவன் நான் தான்,
கடந்த நாட்கள் எல்லாம்
வாய்விட்டுச் சிரிக்க!!
இன்றோ இவளுக்காக
ஒரு துளியில் நனைகிறது
என் உடல்!!!!


உதிரத்தோடு உயிரையும்
கொடுத்தவள் என் அன்னையோ?


நேரம் இல்லை;
அதற்கான காலமும் இல்லை,
இவளை கான...


என் மீசையாக அவள்
கூந்தல் முடி முளைத்ததாக
ஒரு கனவு;


யார் இவள்?
இவளோடு இருக்கும் இரவும்
மெல்ல போக;
நில் என்று சொல்லும் 
கண்;
செல் என்று சொல்லும்
விரல்;
மோதுவதற்க்குள் முடங்கி
போன ஆசைகள் என
எத்தனை வளர்த்துள்ளால்
இவள்..

யார் இவள்?

-SunMuga-
16-04-2013 8.38PM

April 15, 2013

என்னை செதுக்கிய நூல்கள்


"புத்தகம் சில நீ புரட்டு
  அது உன் வாழ்க்கையை
  புரட்டும்"

இது எத்தகைய உண்மை என்பதை நான் படித்த ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களில் இருந்தே நான் உணர்ந்தேன் .

நம் வாழ்வின் நெறிமுறைகளை மாற்றி அமைப்பது ஒரு சில நூல்கள் மட்டுமே.நாம் பார்த்து கொண்டுருக்கும் அன்றாட நிகழ்வுகள் கூட புத்தகம் வழியாக காணும் போது சற்று சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும்.

நூல்கள் மீதான காதல் வளர நான் படித்த ஒரு சில நூல்களே காரணம். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க புயலாக உருமாறும் அல்லவா? அது போல தான் நூல்கள் மீதான பாசம்,காதல் அதிகரிக்கும் போது வலி அறியாமலேயே நம்மை செதுக்கிவிடும்.

எஸ்.ராமகிருஷ்ணன் ;

தேஷந்திரி ; இது தான் நான் படித்த முதல் தொகுப்பு.தேசம் தோறும் நடக்கின்ற வாழ்வின் நெறிமுறைகளை தொகுத்து வழங்கி இருப்பார். இதில் நான் அறிந்து கொண்டது நாம் இன்னும் எத்தனை தேசங்களை கண்டு கொள்ளமாளே இருக்கிறோம் என்று தான்.

அடுத்ததாக" சிறுது வெளிச்சம்"

முதல் தலைப்பே வாசனையாக மாறுங்கள். இதில் "எலினார் அபோட்" என்ற பெண் எழுத்தாளரின் சிறுகதையில் இடம் பெற்ற கதையை மிக நயமுடம் சொல்லிருப்பார்.

அந்த கதையில் இரண்டு குழந்தைகள் போகிற வருகிறவர்களை நிறுத்தி,"நீங்கள் என்ன வாசனையாக மாற விரும்புகிறீர்கள்? " என்று கேட்கிறார்கள்.  இது என்ன அசட்டு தனமான கேள்வி என்று ஒருவர் எறுச்சல் படுகிறார். மற்றவரோ,"எனக்கு இதற்க்கெல்லாம் நேரமில்லை " என்று ஒதுங்கி போகிறார் .

ஒரு நடுத்தர பெண் எனக்கு இந்த உலகத்தில் மிக பிடித்த வாசனை ஒரு விளையாட்டு வீரனின் காலுறையின் வேர்வையின் வாசனை என்று குறிப்பிடுகிறாள்.கால்கள் தான் அவனது பலம் அவன் ஒடி ஒடி எத்தனை வழிகளை கடக்கிறான். என் மகன் ஒட்டபந்தய வீரன் என்றும் அவன் காலுறையில் அந்த வாசனை இருப்பதை நான் அறிந்து இருக்கிறேன் என்றும் , அது தான் நான் மாற விரும்பும் வாசனை!! என்கிறாள்.

April 12, 2013

இட்லியும் + சாம்பாரும்

ஒரு ஊர்ல இட்லி இருந்துசாம் அது ரெம்ப நாளா சாம்பார லவ் பண்ணுச்சாம். இந்த இட்லியோட வீட்ல சாம்பர் இல்லாம யாராலயும் சாப்பிட முடியலயாம்.அதனால இந்த இட்லிக்கு சாம்பார கல்யாணம் முடுச்சு வச்சாங்களாம்.

First Night அப்ப இட்லி சொல்லுச்சாம் சாம்பார்ட,இத்தனை நாள விட இன்னைக்கு நீ ரெம்ப டேஸ்ட அதிகம்டின்னு..

அத தினம் தினம் சாம்பார் நினச்சு வெட்கப்பட்டுசாம்...

இப்படியே நாள் போக போக.. இந்த இட்லிக்கும் சாம்பாருக்கும் சட்னி பிறந்துச்சாம்.

அய்யோ!!!! அய்யோ!!! அப்ப அந்த குடும்பத்துள்ள இருந்த சந்தோசம் இருக்கே... முடியல!!!!

ஒரு நாளு சாம்பார்ல உப்பு இல்லன்னு இட்லி கோவப்பட சட்னி ரெம்ப பயந்துருச்சாம்.. அதுல சட்னிக்கு காய்ச்சலே வந்துருச்சுனா பாரேன்...

அப்படி சண்ட போட்டு கொஞ்ச நாள் இந்த இட்லியும் சாம்பாரும் பேசம இருந்தப்ப தான் சட்னி ரெம்ப வருத்தப்பட்டுச்சாம்..

ஒரு நாளு சட்னி சாம்பார்க்கு ஐடியா கொடுத்துச்சு.. இட்லிக்கு தக்காளி சட்னி செஞ்சு கொடுன்னு,உடனே சந்தோசத்துல சாம்பார் தக்காளி சட்னி செஞ்சு கொடுக்க மறுபடியும் இட்லியும் சாம்பாரும் சேர்ந்துச்சாம்....

இப்ப சந்தோசம் தானா?

-SunMuga-

April 11, 2013

மனிதன்

எவன் இந்த மண்ணில் மனிதனாக இருக்கிறான்?
இன்றைய காலக்கட்டத்தில் மிக மாறிய மனிதர்கள் பலர். காரணம் யார் கேட்டாலும் யாரை கேட்டாலும் வரும் பதில் சூழ்நிலை.
சூழ்நிலை என்பது என்ன?அது யார்? அது வேற ஒன்றும் இல்லை சுயநலம் தான்..
பிச்சை எடுக்கும் மனிதனுக்கு காசு கொடுத்தால் தான் மனிதன் கூட கடவுளாக மாறுகிறான்.
வேர்வைத்துளியை இவன் சிந்த அதில் வரும் பலமடங்கு லாபம் மேல்வர்க்கத்தின் சுயலாபம்.
தன் பெயர் வெளி வர வேண்டும் என்று அயராது உழைத்தவன் உயர்ந்துவிட்டால் தன் உண்மையான பெயரை கூட மறந்து விடுகிறான்..
காரியம் ஆக வேண்டும் என்றால் கரையான் போல அரிப்பவன் கூட முடியாத நிலையில் நம்மை நிலை குலைய செய்வான்...
தன் சுய இலாபத்திற்காக சுயநினைவுஅற்று திரியும் இந்த மனிதர்களை மண் தின்ன கூட அதிகம் யோசிக்கும்...
-SunMuga-

கிறுக்கன்


அழகிய மாலை பொழுது,
கூவும் குயிலின் ஒசை,
இல்லை இல்லை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது,உன் கொலுசின் ஒசை தான் அது...

மயங்கிய மாலையில் காதலை விழுங்கி நான் நிற்க....
சேலை கட்டி நீ நடந்து வந்து உன் மோன பார்வையில் ஒரு முத்தமிட்டு...
என் கை விரலை பிடித்தபடி I love you சொன்னதாக ஒரு கணவு.
இப்போது சொல் பெண்ணே நான் கிறுக்கன் தானே?
நான் உன்னை பற்றி எழுதும் போதும் நினைக்கும் போதும் ஒரு கிறக்கம் உற்ற ஒரு கிறுக்கனாகவே முளைக்கிறேன் இந்த மண்ணில்.
உன்னை பற்றியும் உன் அழகை பற்றியும் பல கிறுக்கல்கள் கிறுக்கவேண்டும் என்று தோன்றி மறைகிறது.
நீ கீறிய இதயமும் துடிக்கிறது என் நாடி நரம்பும் சிலிர்க்கிறது மாலை வேலையில் உன்னோடு நான் மட்டும் தனியாக பயனித்த போது..
நான் மெல்ல கிறுக்கிய வார்த்தைகள் எல்லாம் உன் உளரலாக உறுமாற வேண்டும்...
பெண்ணே எனக்கும் பித்து பிடித்தது நினைவில் - கனவில் நீ எனக்கு கொடுத்த பத்து முத்தத்தால்...
-SunMuga-

April 9, 2013

தெய்வம்

எழுதியவன் நான்.
எழுதவைத்தது நீ..
சதா அம்மாவின் காலடியை சுற்றி திரிந்தவள் பற்றிய ஒரு சரித்திரத்தின் பிரதி தான் இது.
அம்மா என்ற ஒரு வார்த்தைக்குள் அனைத்தும் அடங்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் இங்கு அது பிரதிபலிக்கிறது .
காலை எழுப்புவது முதல் இவளை வேலைக்கு கிளப்புவது என  இவள் அம்மாவின் வேலை தொடங்குகிறது ஒவ்வொரு நாளும்.
அம்மா இன்னும் கொஞ்ச நேரம்,இன்னும் கொஞ்ச நேரம் என்று, இவள் எழும் போது செல்லமாக சொல்லும் வார்த்தைகளை முரைத்த படியே ரசித்துருக்கிறாள் இவள் அம்மா.
நீ குளிக்க இவ்வளவு நேரமாடி என்று கோவத்துடன் கேட்ட படியே இவளுக்காக சமையலும் செய்துகொண்டே தான் இருப்பாள் இவள் அம்மா.
உடுத்திய உடையை இவளே ரசித்து உடுத்திருக்க மாட்டாள்,ஆனால் இவள் தாயோ அதை ருசித்து பார்த்தபடியே இருக்கிறாள் இது தான் தாய் பாசமோ!!!
அங்கும் இங்கும் இவள் ஒடிய படி ஜடைகளை பின்ன, வண்ண பூவும்இட்டு,இவள் தாயோ இவள் போகும் இடத்திற்கு எல்லாம் இவளுக்கு முன்னால் நின்று ஊட்டிக்கொண்டு இருப்பாள், நேரம் ஆயிற்று என்றபடி..
ஒருநாளும் இவள் கண்டு இருக்க வாய்ப்பில்லை நம் பிள்ளை வேலைக்கு செல்கிறதே என்று இவள் தாய் சிந்திய கண்ணீரை..
வேலைக்கு இவள் சென்றாலும்,வேல வேலைக்கு இவளை என்னியே இவள் தாய்க்கு காலம் போகும்.
சூடிய பூ வாடும் நேரம் வரும்போது இவளுக்காக காத்திருப்பாள் இவள் அன்னை.
என்னமா செஞ்சு வச்சுருக்கன்னு இவள் கேட்பதற்கு முன்னால் இவளுக்காக ஏதேனும் எடுத்து வைத்துருப்பாள் .
இவளின் பாசம் வெளிப்படுவது அவள் அன்னையின் உடல்நிலை சரியில்லாத காலத்தில் தான். ஆனால் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தான் அவள் அன்னையின் பாசம் அதிகம் ஆகும் இவள் மீது.

அன்னைக்காக ஒரு சில வரிகள் ;

என் தெய்வமே
என் தலையனையாக
இருந்த நீ
இன்று சிந்தனையாகவே
என்னுள் உயிர்
வாழ்கிறாய்!!!

நாம் வாதாடிய சொற்கள்
எல்லாம் இன்றும்
வாதாடிக்கொண்டே தான்
இருக்கிறது நம்
வீட்டில்...

காற்றில் நீ கலந்தாலும்
இன்றும் என்
கண்ணில் தான்
குடியிருக்கிறாய்..

என்னை எண்ணி நீ
கலங்காதே நான்
தைரியமாக தான்
இருக்கிறேன் உன்னோடு
உன்னால்...
     
உனக்கு கால்கள் வலித்தால்
தயங்காமல் என்னிடம் சொல்
நான் இருக்கிறேன்,
ஒத்தனம் கொடுக்க.

மூன்று பிள்ளையில் ஒரு
பிள்ளை ஆனாலும்
நான் தான் உன்
முதல் பிள்ளை
என்பதை நான் அறிவேன்.

நான் வடித்த கண்ணீர்
எல்லாம் உன் பாதம்
கழுவுவதற்க்கு தான்
நான் கலங்குகிறேன் என்று
நீயும் கலங்கிவிடாதே!!!

ஆறுதல் கூறவும் ஆள் இல்லை
என் ஆற்றல் நீ என்று
நான் எண்ணி விட்டதலோ
என்னவோ..

நான் இன்று தொடும் இடம்
எல்லாம் நீ
தொட்ட இடங்கள்
இன்னும் சொல்ல
போனால் நீ இருக்கிறாய்
என்றே தொட்டுப்
பார்க்கிறேன் என்
அன்னையே!!!

காரணம் அறியாமல்
இன்று கண்ணீர்
வடிகிறது. நீ என்னுள்
இருக்கிறாய் என்பதற்க்கு
சாட்சி போல..

நான் கண்ட காட்சிகள்
எல்லாம் கனவா?
நனவா? என்று கூட
தோன்றுகிறது.

ஏதும் அறியாத மழழையாகவே
இருக்கிறேன் இன்று
உந்தன் அன்பால்..

உன்னிடம் உயிரை
பெற்றதும் இல்லாமல்
இன்று தைரியத்தையும்
கற்றேன்..

என்னில் என் ஆசைகளை
நான் புதைத்து வைத்ததே
இல்லை - நீ தான் எனக்கு
முன்னரே அறிந்து
வைத்திருக்கிறாயே எனக்கு
என்ன வேண்டும் என்று.

ஆயிரம் ஜென்மம் நான்
எடுத்தாலும் உன்
பிள்ளையாக நான்
பிறக்கும் வரம்
மட்டும் அந்த இறைவன்
அருளினால் போதும்

-SunMuga-
24-03-2013 5.00AM

April 7, 2013

நீயும்-நானும்-காதலும்

நீ இன்றி என் காதல் இல்லை,
உயிரே நான் இன்றி நீ இல்லை,
நீயும் நானும் பழகிய நாட்கள் குறைவு;ஆனால் அதில் காதல் அதிகம் .
நான் உன்னிடம் ஒரு முறை கூட என் காதலை சொன்னதில்லை; நீயும் உன் காதலை இந்நாள் வரை சொன்னதில்லை ; இது தான் பொக்கிஷ காதலோ?
மனதுக்குள் புதைத்து விட்டு விழி வழியாக தேடுகிறாயே என் உயிரே..
நீயும் - நானும் - காதலிக்கிறோம்- பரிமாறாமல். .
-SunMuga-

குழந்தையின் பெயர் காதல்

என்று நீ பிறந்தாய் என்று எனக்கு தெரியாது;ஆனால் உன் தாய் யார் என்று எனக்கு மட்டுமே தெரியும் ஏன் என்றால் உன் தந்தை நான் என்பதால். ஆம் நீ பிறந்தது உன் அன்னைக்கு கூட தெரியாது -அவளும் ஒரு குழந்தை தானே!!
நான் உன் மீது வைத்துள்ள அன்பே அவளிடம் நான் காட்டும் அன்பில் சிறுதுளிதானடா மன்னித்து விடு என்னை!!!
நேற்று மாலை தான் உன் அன்னையை பார்த்தேனடா அவள் கையில் இதோ பார் ஏழு வயது குழந்தை என்று என்னால் சொல்ல முடியவில்லை. எங்கே தனக்கொரு குழந்தை அதுவும் ஏழு வயது குழந்தை இருக்கிறதா என்று பயந்துவிட்டால் என்ன செய்வேன் நான்.. பயப்படாதே என் உயிரே நான் இருக்கிறேன் ஆதி முதல் அந்தமாக உனக்காக ..
நீ என்னுள் தவழ்ந்து நாட்களில் எல்லாம் அவள் நடந்து சென்றுருக்கிறாள்.
அவளை கண்ட நாட்களில் உன்னை மட்டும் தனியாக தவிக்க விட்டு நான் மட்டும் பேசியிருக்கிறேன் மன்னித்துவிடு என்னை..
விழி மூடும் போதெல்லாம் என்னை விட நீ தான் உன் அன்னையை அதிகம் தேடியிருப்பாய்.. கலங்காதே என் உயிரே கண்ணீர் துளி கசியும் போதெல்லாம் நம் அன்னை நம்மை உரசி கொண்டுதான் இருப்பாள்; கண்களை மூடு கனவாக தவழ்வாள் நம் அன்னை..
காத்திருந்த அன்னையை அவள் தேடுகிறாள்; காத்திருந்து நம் அன்னையை நாம் தேடுகிறோம்.
இந்த ஏழு வருடம் எப்படி எழுந்தேன் என்று எனக்கு தெரியாது ; நீ ஏங்கியே என்னை எழ வைத்தாய் என்பதை மட்டும் நான் அறிவேன்.
உன் மீதான பாசமா? இல்லை என் மீதான நேசமா? உன் அன்னை உன்னை விளையாட கூட தடை செய்கிறாளே!!
இது என்ன டா கண்ணாமூச்சி ஆட்டம் உன் அன்னையோ கண்களை திறந்து தானே விளையாடுகிறாள்.. நீயோ என்னுள்ளே ஒளிந்துகொள்கிறாயே....
-SunMuga-

ரயில் பயணம் அரக்கோணம் 2 சென்னை

கைபேசியின் அலரல் சத்தம்
வயிற்றுப் பசியின் குமுரல் சத்தம்
அவிழ்ந்த கைலி முடிச்சுக்கு அடைக்கலம் கொடுத்த படி கால்கள் ஒடுகிறது கழிவறை நோக்கி..
வெந்தும் வெகாத வெந்நீரில் ஒரு குளியல் ..
சிந்திய தண்ணீர்ரோடு கால்கள் ஒடுகிறது சிறகாய் பறக்க..
சிறியதாக ஒரு தேநீர் பருகிவிட்டு பெறிதாய் ஒரு கூட்டத்தை காணும் போது சோர்வடையும் கண்கள் ..
முந்தானையை முந்தி செல்லும் கால்கள் ; சிறு இடம் ஆனாலும் ஜன்னல் ஒரம் என்றால் ஒரு
கௌரவ புன்னகை ..
கிளம்பிய வண்டி முன் செல்ல நம் கண்கள் கடிகாரத்தை நோக்கி பயணிக்கும் ; ஒரு நிமிடமா? இரண்டு நிமிடமா? தாமதம் ..
கொட்டும் பனிகளை விலக சொல்லும் Horn Sound,வேகமாக போவது போல் ஒரு Engine Sound
வாதடும் நண்பர்கள் கூட்டம்
வசிய படுத்தும் பெண்களின் நோட்டம்.
காதை கடிக்கும் பாட்டு சத்தம் கூட தெரியாமல் சின்னதாய் -ஒரு உறக்கம் உலகத்தை மறந்து
நம் பாரத்தை ஏற்றுக்கொண்ட தண்டவாளங்களுக்கு என்ன சோகம்?
முதல் பரிசு யாருக்கும்இல்லை என்றாலும் மாறாத்தாண் ஒட்டம் தான் இறங்கிய உடன்...
கால்கள் ஒடினாலும் கண்கள் தேடுவது பெண்களை தான்..
நடப்பது போல் தான் இருக்கும் சிறிதாய் அவள் பார்த்தால் பறப்பது போல் இருக்கும் பறக்கும் வண்டியில் ஏறும் வரை...
கண்களால் பேசுபவர்கள் காதலர்கள் என்றால்? கைகளால் பேசும் இவர்கள் இயலாதவர்கள்..
கிலிந்த உடையில் சில்லறை சத்தம்; மெலிந்த உடையில் புன்னகை சத்தம்..
-SunMuga -

கவிதை புதையல்

என் கவிதைகள் ;
1. நேற்று சந்தித்து இன்று வரை  நீளுகிறது உன் காதல்..
2. முத்தத்தில் மூழ்கினாலும் மறுஜென்மமும் முத்தமாகவே பிறக்க வேண்டும் என்னவள் இதழில் ..
3. நித்திரை கூட நிதானமாக தான் வருகிறது உன் நினைவால்..
4. நீயும் நானும் பேசியதாய் ஒரு கனவு இதழ் வழி..
5. இரவு கூட கூடகூடுகிறது நட்சத்திரம் போல் என் ஆசைகள் ..
6. நீ என்ன தேவதை என் தேகம் சாயும் போதெல்லாம் சாய்ந்து கொள்கிறாயே..
7. உன் அப்புறம் என்ற வார்த்தையே என் கூச்சத்தை அப்புறப்படுத்துகிறதே..