"புத்தகம் சில நீ புரட்டு
அது உன் வாழ்க்கையை
புரட்டும்"
இது எத்தகைய உண்மை என்பதை நான் படித்த ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களில் இருந்தே நான் உணர்ந்தேன் .
நம் வாழ்வின் நெறிமுறைகளை மாற்றி அமைப்பது ஒரு சில நூல்கள் மட்டுமே.நாம் பார்த்து கொண்டுருக்கும் அன்றாட நிகழ்வுகள் கூட புத்தகம் வழியாக காணும் போது சற்று சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும்.
நூல்கள் மீதான காதல் வளர நான் படித்த ஒரு சில நூல்களே காரணம். காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க புயலாக உருமாறும் அல்லவா? அது போல தான் நூல்கள் மீதான பாசம்,காதல் அதிகரிக்கும் போது வலி அறியாமலேயே நம்மை செதுக்கிவிடும்.
எஸ்.ராமகிருஷ்ணன் ;
தேஷந்திரி ; இது தான் நான் படித்த முதல் தொகுப்பு.தேசம் தோறும் நடக்கின்ற வாழ்வின் நெறிமுறைகளை தொகுத்து வழங்கி இருப்பார். இதில் நான் அறிந்து கொண்டது நாம் இன்னும் எத்தனை தேசங்களை கண்டு கொள்ளமாளே இருக்கிறோம் என்று தான்.
அடுத்ததாக" சிறுது வெளிச்சம்"
முதல் தலைப்பே வாசனையாக மாறுங்கள். இதில் "எலினார் அபோட்" என்ற பெண் எழுத்தாளரின் சிறுகதையில் இடம் பெற்ற கதையை மிக நயமுடம் சொல்லிருப்பார்.
அந்த கதையில் இரண்டு குழந்தைகள் போகிற வருகிறவர்களை நிறுத்தி,"நீங்கள் என்ன வாசனையாக மாற விரும்புகிறீர்கள்? " என்று கேட்கிறார்கள். இது என்ன அசட்டு தனமான கேள்வி என்று ஒருவர் எறுச்சல் படுகிறார். மற்றவரோ,"எனக்கு இதற்க்கெல்லாம் நேரமில்லை " என்று ஒதுங்கி போகிறார் .
ஒரு நடுத்தர பெண் எனக்கு இந்த உலகத்தில் மிக பிடித்த வாசனை ஒரு விளையாட்டு வீரனின் காலுறையின் வேர்வையின் வாசனை என்று குறிப்பிடுகிறாள்.கால்கள் தான் அவனது பலம் அவன் ஒடி ஒடி எத்தனை வழிகளை கடக்கிறான். என் மகன் ஒட்டபந்தய வீரன் என்றும் அவன் காலுறையில் அந்த வாசனை இருப்பதை நான் அறிந்து இருக்கிறேன் என்றும் , அது தான் நான் மாற விரும்பும் வாசனை!! என்கிறாள்.
No comments:
Post a Comment