April 7, 2013

குழந்தையின் பெயர் காதல்

என்று நீ பிறந்தாய் என்று எனக்கு தெரியாது;ஆனால் உன் தாய் யார் என்று எனக்கு மட்டுமே தெரியும் ஏன் என்றால் உன் தந்தை நான் என்பதால். ஆம் நீ பிறந்தது உன் அன்னைக்கு கூட தெரியாது -அவளும் ஒரு குழந்தை தானே!!
நான் உன் மீது வைத்துள்ள அன்பே அவளிடம் நான் காட்டும் அன்பில் சிறுதுளிதானடா மன்னித்து விடு என்னை!!!
நேற்று மாலை தான் உன் அன்னையை பார்த்தேனடா அவள் கையில் இதோ பார் ஏழு வயது குழந்தை என்று என்னால் சொல்ல முடியவில்லை. எங்கே தனக்கொரு குழந்தை அதுவும் ஏழு வயது குழந்தை இருக்கிறதா என்று பயந்துவிட்டால் என்ன செய்வேன் நான்.. பயப்படாதே என் உயிரே நான் இருக்கிறேன் ஆதி முதல் அந்தமாக உனக்காக ..
நீ என்னுள் தவழ்ந்து நாட்களில் எல்லாம் அவள் நடந்து சென்றுருக்கிறாள்.
அவளை கண்ட நாட்களில் உன்னை மட்டும் தனியாக தவிக்க விட்டு நான் மட்டும் பேசியிருக்கிறேன் மன்னித்துவிடு என்னை..
விழி மூடும் போதெல்லாம் என்னை விட நீ தான் உன் அன்னையை அதிகம் தேடியிருப்பாய்.. கலங்காதே என் உயிரே கண்ணீர் துளி கசியும் போதெல்லாம் நம் அன்னை நம்மை உரசி கொண்டுதான் இருப்பாள்; கண்களை மூடு கனவாக தவழ்வாள் நம் அன்னை..
காத்திருந்த அன்னையை அவள் தேடுகிறாள்; காத்திருந்து நம் அன்னையை நாம் தேடுகிறோம்.
இந்த ஏழு வருடம் எப்படி எழுந்தேன் என்று எனக்கு தெரியாது ; நீ ஏங்கியே என்னை எழ வைத்தாய் என்பதை மட்டும் நான் அறிவேன்.
உன் மீதான பாசமா? இல்லை என் மீதான நேசமா? உன் அன்னை உன்னை விளையாட கூட தடை செய்கிறாளே!!
இது என்ன டா கண்ணாமூச்சி ஆட்டம் உன் அன்னையோ கண்களை திறந்து தானே விளையாடுகிறாள்.. நீயோ என்னுள்ளே ஒளிந்துகொள்கிறாயே....
-SunMuga-

No comments:

Post a Comment