நகரத்தில் நகர்வதை
விட நரகம் மேல்,
பின்னிய அன்பை
பிரித்தெடுத்து-பின்நாளில்
நடிப்பு மட்டுமே மிஞ்சும்
போல..
நாய் கூட நடுவீட்டில்
உண்ண நாளைய
நாயகன் நடுத்தெருவில்
உண்ணுகிறான்.
போரட்டம் பல நடந்த
கடற்கரை கூட
காமத்தில் கரை
ஒதுங்கியுள்ளது.
வறுமையுள்ள உள்ள
உடையில் தள்ளாடும்
பெண்கள், வறுமையுள்ள
பெண்ணிடம் கூத்தாடும்
ஆண்கள் என பல...
பாவப்பட்ட பார்வை
பட்டால் அது தான்
மிகப்பெரிய பாவம்..
பணம் மட்டுமே அறிந்த
மிருகமும் இங்கே,
பணமே அறியாத
மனிதனும் இங்கே..
வாழத்தெரிந்தவன் வாழ்கிறான்,
வாழத்தெரியாதவன் வீழ்கிறான்.
வான்நோக்கி
பெருகி போன கட்டிடங்கள் ,
மிககுறுகிபோன குடும்பங்கள்
என பல வரிசை படுத்தலாம்.
-SunMuga-
17-04-2013 10.23 PM
No comments:
Post a Comment