குறுநகை மீட்டெடுக்கும்
உன் அழகின் அழகை
பெருஞ்சிறை செய்து
என்னையும் அது
வாட்டியெடுக்கும்... 361
என் ஆழ்ந்த சிந்தனைக்குள்
அடங்கி கிடக்கிறது
உன் ஆழ்ந்த முத்தம்.. 362
எப்படி தொடங்கலாம்
என்று விழியில்
நான் யோசிக்கும் போதே
நீயே தொடங்கி விடுகிறாய்
உன் இதழின் வழி.. 363
நிலவை ரசிக்கும்
ஜீவன் நான்
இந்த ஜீவனை
ரசிக்கும் நிலவு நீ... 364
உலகை
நான் கான
முற்படும் முன்
உன் காதலின்
ஆழ்ந்த இசையை
ரசித்துக் கொள்ள
எனக்கும் ஓர் ஆசை.. 365
தனிமையில்
காற்றோடு பாடும்
தாவரத்தை போல
உன் தாவணியின்
நிறங்கொண்ட
இந்த சாலையோர
தாவரத்தோடு
இப்போது பேசிக்
கொண்டு இருக்கிறேன்.. 366
களையும் முன்
கனவுக்குள் ஓர்
அர்த்தமற்ற போராட்டம்
திருமண தேதி
ஏப்ரல் 24 என்பதால்
நல்ல வேளையாக
அன்று திருமண நாள் இல்லை.. 367
அந்த வீட்டில்
நீயும் இல்லை
நானும் இல்லை
இருந்தும் இருக்கிறது
நம் முத்தத்தின்
வெப்பம் காதலாக... 368
நீ இழுத்துக்
கட்டும் கொடிக்
கம்பியை போல
உன் நினைவுகளை
நான் என்
இதயத்தோடு இழுத்துக்
கட்டி வைத்திருக்கிறேன்.. 369
உன் அன்பை
தெரிவிக்க
இப்போது முத்தமிடு
பின்
போதாது என்று
சப்தமிடு... 370