February 3, 2015

2015 கவிதைகள் 211 to 220

கட்டிய
பாலும் சொட்டுகிறது
கண்ணீராக
என் கண்களில்...           211

கண்ட துயரம்
என் கண்ணில்
பதிவாகமல் இருக்க
கண்களால் சிரித்து
கொண்டே
எப்படி உன்னால் மட்டும்
சொல்ல முடிகிறது...     212   

உன் தொந்தரவு
இல்லாமல் தான்
இருக்கிறேன்
உன்னை தொந்தரவு
செய்யும் ஏதோ
ஒரு கவிதையை
எழுதிக் கொண்டு...       213

உன் 15 நிமிட
பேச்சு
நான் அந்நாள்
சுவாசிக்கும் மூச்சு...           214

பிரிக்க முடியாத
நிழலாக
நிலையான
காதல்
உன் காதலே
என் சூரியனே..               215

இரவுக்கும்
பகலுக்கும்
உள்ள கால வெளியில்
உன் காதலை
கண்டு நானும்
மயக்கம் கொள்கிறேன்..   216

இரவின் ஒளியில்
உறங்கச் செல்லும் முன்
உன் குரலின்
ஒலியே ஒலிக்கிறது
காற்றில் ஆடும்
இலைகளின் வழி..           217

ஒன்றோடொன்று
உரசிக் கொள்ளும்
இலையினை போல
காதலின் காற்றில்
உன்னோடு நான்
உரசிக் கொள்கிறேன்..      218

பின்னிரவின்
நிகழ்வுகள்
முன்னிரவுக்கு முன்
உன்னை
வந்தடைய செய்கிறது...   219

மெளனமான
என் வார்த்தைகள்
சொல்லி சொல்லி
அலுத்துப் போன
சோகங்கள்
இப்போது சுகம்
உன்னிடம் தான்
சொல்லி
விட்டேனே!!!         220

No comments:

Post a Comment