February 5, 2015

2015 கவிதைகள் 231 to 240

சேகரிக்கப்பட்ட ஆசைகளை
செலவு செய்கிறது
உன்னுடனான கனவுகள்..  231

எழுத நினைத்து
எழுதி முடித்தேன்
இன்னும் நீ
வாசிக்காத
இக்கவிதையை
நேரம் செலவிட்டு
சொல்லை தேர்ந்தெடுத்தேன்
நீ என்னில்
எப்போதும் தேர்வு
செய்யும் இதழை போல...      232

நீர் வேண்டும்
என்று அலையும்
ஆண் மீன் நான்
நீராக உன்
வேர்வையே வேண்டும்!!     233

பிரபஞ்சத்தில்
இறப்பை நோக்கிய
அனைவரின் வாழ்க்கை
பயணத்தில்
நான் மட்டும்
உன் இதழை
நோக்கி பயணிக்கிறேன்..   234

இன்னும் இருக்கிறது
நான் உன்னைப்
பற்றி எழுதி வேண்டிய
கவிதைகள் இரவுக்கு
பின்னும்....                            235

உயிர் பெறும்
உடலை போல
வரிகள் அனைத்தும்
உன்னால் உயிர் பெறுகிறது.. 236

எப்போதும் உன்னோடு
இருக்கிறேன்
இப்போது
இந்த நொடி
தனிமையோடு
இருக்கிறேன்
இப்போதே கடந்து
விடுவேன் மீண்டும்
உன்னோடு இருப்பதற்கென்று.  237

இரவை மூடும்
வெளிச்சம் நிலா,
நிலவை மூடும்
வெளிச்சம் இரவு-
இரவு வெளிச்சம்..         238

நான் இங்கிருந்து
பார்க்கும் நிலவை
தான் நீ அங்கிருந்து
பார்க்கிறாய்,
அங்கிருந்தே பார்க்கிறது
நம் இருவரையும்
அந்த நிலா...                      239

மறைமுகமாக உன்
முகத்தை ரசிக்கிறேன்
நேரடியாக உன்னை
நான் ரசித்த பிறகு..        240

No comments:

Post a Comment