February 1, 2015

2015 கவிதைகள் 191 to 200

ஊஞ்சல் அற்ற வீடு
இருந்தும்
உல்லாசமாய் ஓர் அசைவு
முன்னும் பின்னுமாய்
உன் முன்னே
நான் வர
என் பின்னே
நீ தொடர
தொடர்கிறது இந்த
யுகத்திலும் உன் காதல்..   191

ஞாயிறை கடந்த
திங்களுக்கு தெரியும்
என்னை எப்போதும்
தின்னும் உன்
முத்தத்தின் சுவை...           192

என் கையெழுத்தை விட
உன்னைப் பற்றிய
என் கவிதையே அழகு..      193

நிசப்தமாய் நிற்கிறேன்
நீ இல்லாத இவ்விரவில்
நிஜங்களை கடந்து
கனவுகளிலே உன்னோடு
வாழ முயற்சி செய்கிறேன்..  194

வளைந்து வளைந்து
செல்லும்
இந்நகர வழியில்
நுழைந்து
உன் வாசலை
அடைகிறேன்
பார்வையில்
புன்னகையில்
என் காதலின்
அகோர பசியை
தீர்த்த சந்தோசத்தில்
நீயும் நுழைகிறாய்
உன் வாசலின்
வழியே
என் காதலுக்கு..          195

ஒவ்வொரு பொருளையும்
இப்போது
தேடி அலைகிறேன்
உன் காதலை
கையில் வைத்துக் கொண்டு.. 196

பூக்களின் மீதும்
காதல் விரிகிறது
என் காதல்
பூவே உன்னால்...          197

புலரும் காலையில்
புனிதமான
உன் காதலை
வணங்குகிறேன்
வண்ண வண்ண
பூக்களையிட்டு ...           198

நீர் தேங்கும்
சாலையில்
உன் நினைவுகள்
தேங்கியுள்ளது....        199

வெள்ளையும்
இருளுமாக
நகரும் இவ்வாழ்க்கையில்
உன் சகல
நினைவுகளையும்
என் கவிதைக்குள்
அடைத்து விட
என்னால் இப்போது
முடியவில்லை
இருந்தும் முயற்சி
செய்கிறேன்...          200

No comments:

Post a Comment