February 28, 2015

2015 கவிதைகள் 351 to 360

மலர துடிக்கும்
அரும்பு போல
உன் குறும்பால்
என்னை மூடிக் கொள்கிறாய்.. 351

வெற்றிடத்தில்
என் வெறுங்கையை
நீட்டுகிறேன்
வெற்றிடமாய் நீ
எங்கும் என்
அறையில் நிரம்பி
இருப்பதால்...                 352

கனவில் உன்னோடு
சுற்றி அழைந்த பிறகு
உன்னோடு ஓர்
ஆழ்ந்த அமைதியை
தேடுகிறது என் இதழ்..   353

மெல்ல மெல்ல
ஓர் கனவை
உருவாக்குகிறேன்
உன் காதலின் வழியே...   354

வெறுமை நிரப்புகிறது
இவ்விரவு
இருந்தும் பொறுமை
காக்கிறது
உன் இதயம்
எப்போதோ
சேர்ந்த இதழை நினைத்து..  355

பெண்களை பார்க்கும்
போதெல்லாம்
அன்பே! உன் ஞாபகம்
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
நீ எந்தவொரு
பெண்ணிற்கும்
என் ஞாபக அடுக்கில்
இடம்கொடுப்பது இல்லை
ஏன்?
நீதான் ஒரு தேவதை ஆச்சே!!  356

ஆதிமுதல்
என் அனைத்து
கவிதையின்
ஓர் அழகான விண்ணப்பம்
உன் முத்தம்
வேண்டுமென மட்டுமே!!   357

உள்ளாடை களைத்த
அந்த இரவு
இன்னும்
உடம்பின் உள்ளுக்குள்
ஏதோ ஒன்றை
களைக்கத் தான்
செய்கிறது என் பெண்ணே! 358

மறைமுக துக்கம்
ஒன்று என்
கவிதைக்குள் புதைகிறது
மரணமற்ற ஓர்
அந்தி நேர காதலால்..           359

தொடங்கிய
முதல் முத்தம்
தொடங்கும்
நேரமிது
தொடங்கும்
இடம் அது- உன் இதழ்.          360

No comments:

Post a Comment