சோகம் நிரம்பிய
என் கண்களில்
நீ எப்போதும்
சுகமாய் என்னை
சிரிக்க வைக்கிறாய்... 331
பெரும் மழை
கூட்டிய குளிர்ச்சி
உன் குரலை
நான் உள்வாங்கும்
நொடிகளில்... 332
நீ என் கண்ணம்
பற்றும் போது
நான் உன் காதலோடு
இதழையும் பற்றி
விடுகிறேன்.... 333
ஏன் இந்த
இரவு நேர
மழை மட்டும்
உன் முத்தத்தை
நினைவூட்டுகிறது.. 334
இன்னும் ஒரு முறை
படிக்க ஆசைப்
படுகிறேன் அன்பே!
உன் இதழ் கவிதையை.. 335
பேசிய நதியும் நீ!
கொஞ்சிய அலை
கடலும் நீ!! 336
கண்ணீர் துளியை
மறந்து
நீயும் ரசிக்கிறாய்
என்னோடு ஓர்
சிறு மழைத்துளியை... 337
நீ இருக்கும்
திசையை நோக்கி
காதலோடு நகரும்
மெல்லிய இழை நான்.. 338
நினைவுகளை
மீறி விட்ட
கனவு அது... 339
நீலம் பூசப்பட்ட
வானத்தின் கீழ்
பச்சை இழையாய்
நம் காதல்.. 340
No comments:
Post a Comment