எழில் நிறைந்த
இவ்விரவில்
என் தனிமையை
சகித்துக் கொள்கிறேன்
சகியே!
தனிமையில்
இனிமையாய்
உன் நினைவுகளின்
சாயல் என் மீது
படரும் போது... 321
நிஜத்தில் காதலனாக
கனவில் கணவனாக
இரண்டு வேடங்கள்
இட்டுக் கொள்கிறேன்.. 322
கனவு கலைந்ததும்
சிரித்துக் கொண்டேன்
அப்போதிலிருந்து
நான் எப்போதும்
சிரித்துக் கொள்ள
புதிய புதிய
கனவுகளை நீ
வழங்கிக் கொண்டே
இருக்கிறாய்.. 323
தீப வெளிச்சத்தின்
இடையே
என்னால் சொருகப்பட்ட
காமத்தினால்
முழுவதுமாய் அனைக்கப்பட்ட
ஓர் காதல்
மீண்டும் தீபமாய்
ஒளியூட்டுகிறது
உன் காதல்... 324
பெற்றோரை தவற
விட்ட குழந்தையை போல
நானும் அழுகிறேன்
உன் காதலை
பெற்று தவற
விட்ட பின்பு.. 325
உனக்கென
ஓர் கவிதையை
தேட ஆரம்பித்துவிடுகிறேன்
உன் முத்தத்தை
பெற்ற பிறகு
உன் முத்தத்தை
பெறுவதற்காக... 326
என் அறையெங்கும்
நிரப்புகிறேன்
உன் காதல் நினைவுகளை
எப்போதும்
கண்ணில் வெளியேறும்
உன் கனவுகளை.. 327
மெல்ல மெல்ல
உனக்கென
காதல் கடிதம்
எழுதி மடித்து
வைத்துக் கொள்கிறேன்
யாரேனும் பார்த்துப்
படிக்கும் முன்னே... 328
அலுவலக அறையில்
அமர்ந்து
அமைதியாக நான்
உன் கண்களை
பார்க்கிறேன்
கணினியின் வழியே.. 329
ஆடைகள் உடுத்தி
மெல்ல மெல்ல
அசைந்து போகும்
அதிசய நதி நீ! 330
No comments:
Post a Comment