சிறகு முறிந்த பறவை
நான்
உன்னை நினைத்து
சிறகாய் என்னை
இழக்கும் பறவையும் நான்..
கூடு இல்லாத
பறவை போல
உன் காதல் இல்லாமல்
வாடும் பறவை நான்...
சந்தோசத்தில் பறந்தேன்
உன்னை நினைத்து
சந்தேகம் இல்லாமல்
என் காதலை வளர்த்தேன்
காகிதமாய் நான் கருகி
போகும் வரை...
உன்னை பிரிந்து
வாழும் இந்நொடியில்
உணவு ஒரு கேடா என்ன?
உறக்கம் வராத இவ்விரவில்
உன்னைப் பற்றி
ஓர் கவிதை எழுத
எனக்கும் ஆசை தான்
அதான் கண்ணீராய்
வடித்து கொண்டு
இருக்கிறேன்
No comments:
Post a Comment