February 13, 2015

2015 கவிதைகள் 281 to 290

நிகழ்காலத்தின் கனவுகளாக
கனவுகளின் எதிர்காலமாக
எதிர்காலத்தின் நிகழ்வுகளாக
நிகழ்வுகளில் நினைவுகளாக
எப்போதும் இருக்கிறது
உன் காதல்....                      281

பேரின்பமாய் இருக்கிறது
உன் நினைவுகள்
பெரும் வண்ணமாய் இருக்கிறது
உன் கனவுகள்..             282

வலி கூடிய நெஞ்சத்தில்
உன் முகம் பதித்தால்
நானும் அஞ்சாமல்
ஏற்பேன் வலியையும்...  283

மயில் ஆடிய மழையை
நீயும் நானும் ரசித்த பிறகு
என் மனதில்
பெய்யும் மழையினில்
நீயே ஆடுகிறாய் மயிலாக.. 284

தோகையாக என்னுடன் ஆன
ஓர் ஆசையை
விரித்து ஆடும்
வண்ண மயில் நீ...               285

உன் மெளனத்தில்
மெல்ல கரையும்
ஒலி நான்..                    286

தனிமையென்னும்
இக்காலத்தை கழிக்கிறேன்
காதலின் எதிர்கால
சிந்தனையில்...       287

பறிக்க பறிக்க
வளர்ந்து கொண்டே
இருக்கிறது உன்
காதல் பூ...                288

என் பிம்பத்தில்
இருந்து வெளியேறுகிறது
உன் பிம்பம்
யாருமற்ற அந்த
புனிதமான மாடியில்..    289

கனவிலும்
என் கண்கள் கூசுகிறது
மித மிஞ்சிய
உன் கண் மையின்
வெளிச்சாத்தால்....        290

No comments:

Post a Comment