கனவு கண்டபடி
உன்னோடு
மிதந்து
செல்கிறேன்
நிஜமாகவே
அது கனவு தானா?
இல்லை
உன் காதலா? 201
வாழ்வதற்கு
வந்த வீடு
நீ போவதற்கும்
வழி செய்கிறது
கையேட்டின் வழியாக.. 202
உன் ஞாபகம்
மெல்ல மெல்ல
கரைந்து பெருகுகிறது
கண்ணீராக.... 203
நீ விடை பெற்று
விடுவாயோ என்று
விடை கொடுக்கிறேன்
என் உறக்கத்திற்கு... 204
நீ தான்
என் உலகம் என்று
உள்ளம் அழ அழ
இன்னும் ஆழமாக
தெரிகிறது கண்களில்.. 205
படித்த பக்கங்கள்
பாதி கூட இல்லை
இப்பொழுது
தெரிகிறது அனைத்து
பக்கங்களும் என்
கண்களுக்கு கோபத்தின்
ரூபமாய்.... 206
படித்த புத்தகம்
போல
ஒவ்வொரு பக்கமாக
மூடுகிறேன்
கண்ணீரின் வழியே... 207
படிக்கும் போது
தவறவிட்ட வார்த்தையை
மறந்து
அர்த்தம் இல்லாமல்
அடுத்த வரியை
வாசிப்பதை போல தான்
கோபத்தில் ஏதோ ஏதோ
செய்கிறேன்.. 208
யாரோ எழுதிய
கவிதையில் உன்
கண்களின் ஒளியும்
கை ரேகையின் ஒளியும்
ஒரு சேர
மின்னுகிறது
நீ வாசித்து
கொடுத்த பின்பு... 209
நீ வந்த பின்பு
தான்
எனக்கு எப்பொழுதும்
கனவாக தூக்கமே
வருகிறது.... 210
No comments:
Post a Comment