February 9, 2015

2015 கவிதைகள் 251 to 260

நானும் அழைத்தேன்
என்ன நினைத்தாய்
உன்னையும் நினைத்தேன்
உறங்காமல் உயிராய்
எனக்காக காத்திருந்த
நீ இப்போது ஏற்க
மறுத்தாயோ என் அழைப்பை
இருக்காது என்று
நம்புகிறேன் இருந்தாலும்
தவிக்கிறேன்....                251

அறைகளில் நுழைந்த
நான் அழுது கொள்ள
அழைக்கிறேன் அல்லது
நீ அழாமல் இருக்க
அழைக்கிறேன் உன்
துயரத்தை...                      252

நீ தொட்டவுடன்
என்னை பின் தொடர்ந்து
வருகிறது உன்
புன்னகையோடு
ஒர் புது உலகம்...            253

மன்னித்து விடு
இப்போது அழ போகிறேன்
உன் மடி வேண்டுமென.. 254

உறங்கும் இவ்வுலகத்தில்
உறங்காமல் தவிக்கிறது
என் உலகம்
என்னோடு உறங்குவதற்கு.. 255

முடியும் போது
தொடங்கும் முத்தத்தை போல
மடிந்த பின்னும்
தொடங்கும் என் காதல்..   256

புல்வெளி நிறைந்த
என் சமாதியில்
பூக்களாக மலர வேண்டும்
உன் முகம்
என் மனதில்...          257

என் பெயருக்கு பதில்
உன் முகம் இருந்தால்
இன்னும் ஆயிரம்
முறை நானும் காதலிப்பேன்
உன்னை கல்லறையிலும்..  258

எரிப்பது வழக்கம் என்றால்
எரிக்கட்டும்
கடைசியாக முகம் மூடும்
எருகு உன் கையால்
இருந்தால்...               259

பெண் நுழைய கூடாத
இடம் அது என்பதால்
நீ உடுத்தும் உடையில்
ஏதேனும் ஒன்றை
என் உடம்பில்
சுற்றி விடு
நானும் சந்தோஷமாக
சுற்றி வருவேன்
காற்றாக இவ்வுலகத்தை... 260

No comments:

Post a Comment