February 12, 2015

2015 கவிதைகள் 271 to 280

சுற்றும் பூமியில்
நான்
உன் புன்னகையை
சுற்றிக் கொண்டு
இருக்கிறேன்...        271

என் இதழில் கவிதை
எழுதுவதற்காக
பேனா தேடுகிறேன்
பேனாவாக உன்
இதழை தேடுகிறேன்..    272

கண் அடிக்கும் முன்
கண் மை இட்டுக்
கொள்கிறாய் - கனவில்..  273

கைக்குழந்தையை
தூக்குவதை போல தான்
உன் நினைவுகளை
தூக்கிச் செல்கிறேன்
மிக பத்திரமாக...             274

கடிதம் கொடுக்க
காத்திருக்கிறேன்
கடிதமாக காதலையும்
கொடுக்க
காத்திருக்கிறேன்...     275

பறவையென
பறத்தலை விட
கனவென உன்னோடு
இருத்தலே சாலச் சிறந்தது..  276

சமைக்கும் போது கூட
சுவைத்துக் கொள்கிறேன்
உன் இதழ் முத்தத்தின்
நினைவுகளை...                  277

உன்னை கவரும்
வார்த்தை என்பதால்
இது கவிதை
இல்லையெனில்
வார்த்தைகள் நிரம்பிய
வெறும் காகிதம் தான்...    278

நான் தேடிய
வார்த்தைகளில்
தேவதையே உன் முகம்..  279

ரகசியமாய் உன்னை
ரசித்த பின்பு
நீ ரசிக்கும்
படியான ஓர்
கவிதை எழுதுகிறேன்
மிக ரகசியமாக..   280

No comments:

Post a Comment