February 5, 2015

2015 கவிதைகள் 221 to 230

என்னை காண
வந்த தேவதை நீ!!
என்னை காதலன்
என்று கண்டு
விட்ட தேவதையும் நீ!!          221

உன் மெல்லிய
ராகத்தில்
ரகசியமாய் வைத்து
இருக்கிறாய்
என் முத்தத்தின்
ரகசியத்தை....                   222

சாலையில் வழிவிடும்
மரங்களை போல
நான் என் வாழ்க்கையை
கடப்பதற்கு உன்
காதலே வழிவிடுகிறது..    223

எப்படி என்னுள்
இருக்கிறது உன் முத்தம்
எப்படியும் நீ
சொல்லித் தான்
ஆக வேண்டும்
முத்தத்தின் வழி..            224

முகமே என் முகம்
கரு மேகமே
என் தேகம்
அகமே உன் முகம்
என் முத்தமே
உன் தேகம்...                    225

எல்லையை தாண்டி
பறக்கும் பறவைகள் நாம்
நமக்கான
இரவு வானில்....              226

மஞ்சள் விளக்கில்
என் நெஞ்சம்
தொலைத்தேன்
கருமை கலந்த
உன் கண்களால்
என் கை விரலில் இருந்து
மஞ்சள் நிற
மோதிரத்தை கழட்டி
உன்னில் இட்டு
நானும் வளர்தேன்
என் காதலை கண்ணீரோடு..227

ஏதோ ஒன்றை
நீ சொல்லிய
பின்பு உன்னில்
எழும்
உன் சிரிப்பொலிக்காகவே
நீ ஏதோ ஒன்றை
சொல்லியாக வேண்டும்..    228

இழையின் நுனியில்
தொடர்கிறது
இன்னும் ஓர்
மழைத்துளி...             229

பெருமழை நிரப்புகிறது
என் இதழை
உன் இதழால்....          230

No comments:

Post a Comment