நினைவில் இருந்து
தப்பி நான்
உன் கனவுக்குள்
ஓடி வருகிறேன்
ஒரு முறை
நீ கொடுத்த முத்தத்தால்.. 341
நீ எப்போதும்
தர வேண்டும்
நான் எதிர்பாராத
அந்த முத்தம்
அந்தி மழையில்... 342
நிரப்பப்பட்ட தேநீர்
கோப்பை போல
உன் காதலின்
நினைவுகளை நிரப்பிக்
கொள்கிறேன்
தேநீர் தேவைப்படும்போது.. 343
உன் கனவுகளுக்கு
வழி அனுப்புகிறேன்
நினைவில் நீ
கிடைத்த பிறகு... 344
என் கவிதையால்
உனக்கொரு
உடை அமைக்க
காத்திருக்கிறேன்.. 345
ஒவ்வொரு பூக்களுக்கும்
ஒவ்வொரு வாசம்
என் கவிதைகளுக்கு
உன் காதலின் வாசம்... 346
காதலில் காமம்
கரைகிறது
காமத்தில் காதல்
உறைகிறது.. 347
முழுவதுமாய் அழிந்து
போகிறது வெட்கம்
வெகுநாட்கள் கழித்து
கூடிய இரவின் போது. 348
இன்று உன்னுடனான
ஓர் இன்பம் தான்
இன்றைய அதிக
கவிதையின் வழி.... 349
உன் கனவுக்கு
விடுமுறை அளிக்கிறேன்
நினவில் உன் கைவிரல்
கோர்த்த நொடியில்.. 350
No comments:
Post a Comment