முழு இரவையும் கடக்கிறேன்
முழுதாய் உன்னை
நினைத்துக் கொண்டு
முழு நிலவாய்
உன்னை ரசித்துக் கொண்டு.. 291
எப்போதுமே
நீ கேட்கும் கேள்விக்கு
பதில் - இதழ்
பதிவிலே முடிந்துவிடுகிறது.. 292
பதிக்கப்பட்ட புத்தகம் போல
என்னையே நான்
புதுப்பித்து கொள்கிறேன்
உன் காதலின் எழுத்தால்.. 293
விடிவதற்கு முன்
முடித்துக் கொள்கிறேன்
என்னில் இருக்கும்
காமத்தை காதலின்
வருகையால்..... 294
என்னைச் சுற்றி
அடர்ந்திருக்கும் தனிமையின்
கூடுதல் இனிமை நீ... 295
முழு உலகையும்
உன் முன் வைக்கிறேன்
முதல் இதழ்
முத்தத்தின் வழியே.. 296
வளர்ந்து விட்ட ஆசையில்
இன்னும் பெரிதாய்
வளர்கிறது உன்னோடு
ஓர் கனவு... 297
சுகமென நான்
கடக்கும் இவ்விரவில்
சுகம் மிகுந்த
உன் குரலே ஒலிக்கிறது
இரவை இரவாகவே
என்னை ரசிக்க
வைக்கிறது... 298
நான் ரசித்த இரவு
உன்னோடு கழித்த
அவ்விரவு மட்டும்தான்
இன்னும் அழகாக
இருக்கிறது இவ்விரவில்.. 299
நான் புரிந்து கொள்ளும் போது
நீ சிரித்துக் கொள்கிறாய்
நீ சிரித்துக் கொள்ளும் போது
நானும் புரிந்து கொள்கிறேன்.. 300
No comments:
Post a Comment