February 7, 2015

2015 கவிதைகள் 241 to 250

இன்னும் ஒரு
ஆயுள் எல்லாம்
எனக்கு வேண்டாம்
இப்போது இருக்கும்
உன் அன்பின் ஆயுளால்..      241

அதிக நேரம்
நீ பேசி விட்ட பிறகு
உன்னை
அதிகமாய் நேசிக்கிறேன்
இன்னும்
அதிகமாய் ரசிக்கிறேன்..      242

இதோ விடியல்
வந்து விட போகிறது
அறை முழுதும்
வெளிச்சமாய்
ன் கவிதைகள்
நிரம்பி விட போகிறது...      243

கவிஞன் என்று
சொல்லிக் கொள்ள
நான் எழுதவில்லை
இக்கவிதைகளை
உன் காதலன் என்று
சொல்லிக் கொள்ளவே
எழுதிக் கொண்டு
இருக்கிறேன்...                244

மிக கவனமாக
உன் எதிரில்
அமர்ந்து உந்தன்
கண்களை கவனிக்கிறேன்
அவை எப்போது
வேண்டுமானாலும்
முத்தமிடலாம் என்பதால்..   245

எதற்காக காத்திருக்கிறாய்
என்று கேட்கிறது
உன் விழி
அந்த வார்த்தைக்காக
தான் நானும்
காத்திருந்தேன்
இப்போதே கொடுத்து
விடுகிறேன் முத்தத்தை..   246

எதற்காக காத்திருக்கிறாய்
என்று உன் விழி
கேட்கும் வரை
காத்திருக்கிறேன்
அதற்காக...               246.1

வானம் பரந்து
விரிந்து அதே
இடத்தில் இருக்கிறது
உன் காதல்
என் இதயத்தில்
இருப்பதை போல..           247

தானாகவே வேலை
செய்கிறது உன் காதல்
தாமதமாக நான்
உணர்ந்த பின்னும்...        248

காற்று கூட
ஒரு நாளில்
என்னை கைவிடலாம்
அப்போதும் நீ
என் கையை
பற்றிக் கொண்டு தான்
இருப்பாய்
கண்ணீர் விட்ட படி..         249

பொய்யை விரும்பும்
உண்மை நீ
உண்மையில் நான் பொய்
உண்மையில் நீ உண்மை..  250

No comments:

Post a Comment