February 26, 2015

2015 கவிதைகள் 311 to 320

சமீபத்திய கவிதை
படித்த உணர்வு தான்
உன் இதழை
பார்க்கும் போது..        311

சமீபத்திய கவிதை
எழுதி முடித்த
உணர்வு தான்
உன் இதழை
சுவைத்த பின்பு..           312

நெரிசல் மிகுந்த
பேருந்தில் ஏதோ
ஓர் பெண்
உரசும் போதும்
தழுவுகிறது உன் உரசல்..  313

உன் உடலின் வெப்பம்
அறிந்தே என்னை
குளிர்விக்கிறேன்
உன் நினைவால்....          314

முன் அறையிலேயே
சொல்லி விடுகிறாய்
சமையல் அறையில்
செய்ய வேண்டியதை..      315

ஆகாரமாக
உன் முத்தம்
இல்லாமல் காத்திருக்கிறது
என் காதலின் உடல்..         316

நீ இல்லாத
பெரும்பாலான கனவை
நானே தடை செய்கிறேன்
உறங்காமல்...                      317

உறங்கிய பின் வரும்
கனவில் பின் குறிப்பாய்
எப்போதும் இருக்கிறது
உன் கடைசி முத்தம்...        318

முகா என்று
என்னை நீ அழைத்தால்
முத்தம் காத்திருக்கிறது
என்று அர்த்தம்...             319

நீ செய்யும்
சின்ன சின்ன
செயல்கள் தான்
என் அன்றாட கவிதைகள்..  320

No comments:

Post a Comment