February 9, 2015

2015 கவிதைகள் 261 to 270

உன் குரலின் வழியே
கூறப்படும்
குறளில் தான்
உன்னத பொருள் அடங்கியுள்ளது
எங்களுக்கான உலகில்...   261

உறங்கும் முன்
உன் குரலில்
ஒரு குறள் வேண்டும்
என் உயிரே!!                   262

உலக பொதுமறை
என்னுள் எப்படி
பொக்கிஷம் ஆனது
உன் குரலின் வழி...      263

உலகின் பழ மொழிகளில்
மொழி பெயர்க்கப்பட்ட
குறள்கள்
என் மொழியில்
உன் பெயர் செதுக்கப்பட்ட
குறள் ஆனது...           264

நிற்க அதற்கு தக
என்று நீ கூறிய
போது நின்ற
உன் கருவிழிகள்
இன்னும் நிற்கிறது
என் கரு விழியில்...     265

உனக்கு தெரிந்த
ஜந்து குறளில்
அடங்கி விட்டது
மொத்த திருக்குறளும்...  266

அறிவுடமை தலைப்பு
அறிவின் உடமையாய்
ஆனது உன் குரலில்...    267

தேவதையின் மடியில்
தேவதை
எனக்கு
எப்போதும் தேவையாய்
இருக்கிறது
என் இரு கண்கள்...         268

என்னை மட்டும்
நீ அனுபவிக்கிறாய்
உன் கண்களின் வழி
ஏன்
என்னை மட்டும்
கனவில்
அனுபவிக்க அனுமதிக்கிறாய்.. 269

புத்தகம் தேடுகிறேன்
மயில் இறகாய்
உன் காதலை
ஒழித்து வைத்துக் கொள்ள.. 270

No comments:

Post a Comment