கொட்டும் பனிக் காலத்தில்
நெருப்பை மூட்டி
குளிர் காய்வதற்கு பதில்
என் இதழ் கூட்டி
குளிர் காய்கிறாய்.... 301
பனி நிரப்பும்
இவ்விரவில்
தேநீர் நிரப்பி
உன் நினைவை
கூட்டி வைத்துக் கொள்கிறேன்.. 302
மடித்து வைத்த
புடவையும் சிரித்துக்
கொள்கிறது இரவின்
குதுகலத்தை இன்னும்
நினைத்து... 303
இரவில் தொடர்ந்த
உன் புன்னகை
இன்னும் தொடர்கிறது
அலுவலக மதிய நேர
உணவின் வழியிலும்.. 304
நிசப்தம் மிகுந்த
இவ்விரவில் மிக
அதிகமாக ஒலிக்கிறது
உன் நிசப்தமான
ஓர் முத்தம்..... 305
நம் காதலின் மயக்கத்தில்
விழுகிறது அதோ
ஓர் அழகிய நட்சத்திரம்... 306
ஊடல் கொள்ளும்
முடிவில் நான் உன்னை
உரசும் போது தான்
தெரிகிறது என் மீதான
உந்தன் காதல்
முதல் முத்தத்திலே... 307
மனம் எப்போதும்
அமைதியாய் இருக்கிறது
எப்போதும் நீ
அனுமதிக்கும் இதழ்
முத்தத்தால்...... 308
கவிதை எழுத வராத போது
மிக அமைதியாய்
உன் கைவிரலை
தொட்டுக்கொள்கிறேன்... 309
ஆடம்பர வாழ்க்கையை விட
மிக அமைதியாய்
உன்னைப் பற்றி
ஓர் கவிதை எழுத தான்
ஆரம்பம் முதல் ஓர் ஆசை.. 310
No comments:
Post a Comment