இழையின் நுனியில்
தொடர்கிறது
இன்னும் ஓர்
மழைத்துளி...
உடைந்த கடலின்
பிம்பம் வானத்தில்
கண்ணாடி சில்லுகளாக..
வளர்ந்த புல்லில்
தெரிகிறது
காற்றின் நெகிழ்ச்சி...
உயரத்தின்
மிச்சமாய் பழங்கள்
பறவைகளுக்கு..
கடலின் மீது
பறக்கிறது பறவை
பாறையின் வாசம் அறிந்து..
கூடு கட்ட இடம் தேடி அலையும்
பறவைகளுக்கு
தெரியவில்லை மரமே
இல்லை என்று...
மரங்களை அறியாத
குட்டி பறவை
கூட்டில் இருந்து
பார்க்கிறது புகைவண்டியை..
இறந்து போன யானையை
பசியோடு
இழுத்து செல்லுகிறது
சிறு எறும்பு..
எலியின் வீட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது
பாம்பு நானும்
நகர்ந்து விட்டேன்
நமக்கேன் வம்பு...
பாறையை உரசி விட்ட
சந்தோசத்தில் குதிக்கும்
அருவியை ரசிக்கிறது
பாறையில் அமர்ந்த
ஓர் பறவை...
No comments:
Post a Comment