எங்கிருந்தாலும்
என்னை நேசிக்கும்
என் காதலை
சுவாசிக்கும் ஜீவன் நீ!!! 871
ஒரு நிமிடம்
நீ மெளனமானால்
என்னை நினைக்கிறாய்
என்று அர்த்தம்
சில நிமிடம்
உன் மெளனம் தொடர்ந்தால்
என்னை முத்தமிடுகிறாய்
என்று அர்த்தம்.... 872
கண்ணாடிக்கு
பதில்
உன் கண்களை பார்க்கிறேன்
என்னை நான்
உனக்காக
அலங்கரிக்கும் போது!! 873
உன் இடை
காட்டும் உடைக்கு தான்
என்னையே
உணவாக ஊட்டுவேன்... 874
விதிகள் இல்லை
நம் காதலில்
வித விதமான
ஆயிரம் முத்தங்கள்
நித்தம் தொடரும் போது... 875
காதலின் விதையில்
இத்தனை பழங்களா?
முத்தமாக ..... 876
விடுமுறை நாளில்
எப்போதும் விடுமுறை
நம் வார நாட்களின்
கனவுகளுக்கு... 877
கரையும் வெட்கத்தில்
குறையும் ஆடையில்
அதிகமான முத்தத்தின்
முடுச்சுகள் அவிழ்க்கப்
பட்டு இருக்கும்... 878
உன்னில்
எரியும் தீயை
என் வேர்வை கொண்டு
நான் அனைப்பேன்... 879
மங்காத கனவுகளில்
நானும் நீயும்
களையும் ஆடையில்
எத்தனை வன்ணமையமான
வண்ணங்கள் நிறைந்துள்ளது.. 880
No comments:
Post a Comment