June 2, 2015

2015 கவிதைகள் 881 to 890

நீ
உடுத்திய உடையில்
வண்ணம் மின்னுவது
இயல்பு-
உன் உடலின் பிரதிபலிப்பாக.. 881

இரவில்
உன் மூச்சுக் காற்றை
உள்வாங்கி
நானும் சுவாசிக்கிறேன்
பகலில்...            882

என் பகல் நேர
கனவுகளுக்கு
வண்ணம் தீட்டுகிறது
உன்னுடனான ஓர் இரவு... 883

இனி என்ன
வேண்டும் நான்
உயிர் வாழ்வதற்கு என்றால்
உன்னோடு ஓர் இரவும்
உன்னோடு ஓர் இறப்பும்..  884

இவ்வாழ்வு
பழகிப் போன ஒன்று
இருந்தும்
பலமாய் என்னைக் காக்கிறது
அழகு மிகுந்த இவ்விதழ்.. 885

ரசிக்கும் அளவிற்கு
அழகு இல்லை தான்
என் இதழ்
இருந்தும் நீ ருசித்த பிறகு
அழகாய் இனிக்கிறது எனக்கே!  886

தேடி வரும்
தென்றல் காற்றில்
உனக்கும்
எனக்கும்
ஓர் தேனிலவு...   887

நீ நிலவு
என்றால்
நான் இருள்
உன்னையே சூழ்ந்து நிற்பேன்.. 888

கடலாக காற்றில்
உன்னோடு
விளையாடும் சிறு அலை
நானும்
என் காதலும்...  889

உன் வெட்கத்தின்
அருகில்
நான் அமர்ந்து
மெல்ல மெல்ல
உன் வெட்கத்தை
ரசிப்பேன்..     890

No comments:

Post a Comment