இவை யாவும் உன்னைப் பற்றியோ அல்லது என்னைப் பற்றியோ இல்லை. இது முழுக்க முழுக்க நம் காதலைப் பற்றிய ஒரு தொகுப்பு.
இதில் நம் சந்தோச நிமிடங்கள் கலந்து இருக்கலாம், நம்மின் துக்கம் நிறைந்து இருக்கலாம், இரவின் கனவுகள் மிதந்து கொண்டு இருக்கலாம், பகலின் தீரா காணல் நீர் சுரந்து
கொண்டு இருக்கலாம், கடலின்
அடி ஆழத்தில் நம் காதல் கரைந்து கொண்டு இருக்கலாம், மழையில் நம் காதல் நனைந்து கொண்டு இருக்கலாம், பனி இரவு வேர்வையில் குளித்து கொண்டு இருக்கலாம்,இன்னும் இன்னும் எத்தனையோ இருக்கிறது இக்கவிதைக்குள்ளும், நம் கனவுக்குள்ளும், நம் காதலுக்குள்ளும்.
இக் கவிதை தொகுப்பின் தலைப்பாக "உன் கருவிழியின் க|விதைகள்" தேர்ந்தெடுக்க காரணம், நான் உனக்காக எழுதிய முதல் கவிதை என்று என் ஞாபகத்தின் இருப்பில் இருப்பது இக்கவிதை மட்டுமே..
" நம் இரு கருவிழிகள்
இனைந்து
உண்டான கரு
நம் காதல்"
இக்கவிதையின் ஒரு துளி உள்ளே உடைந்து ஒடிக் கொண்டு இருக்கிறது உன்னை நோக்கியும், உன் தீரா முத்தத்தை எதிர் நோக்கியும் அவ்வளவுதான்.
நீ என்னோடு இருந்திருந்தால்
உன் கருவிழி கூறும் வார்த்தைகளில் இதை
ஐந்தே இரவுகளில் முடித்து இருப்பேன். இப்பொழுது பார் இதை எழுதி முடிக்க ஐந்து மாதமும் ஆறு நாட்களும் ஆகிவிட்டது.
தனிமையின் இருள் நிறைந்த அறையில் உன் காதல் எனக்கு வெளிச்சம் காட்டி வெள்ளமென என் காதல் கவிதைகளை கூட்டி உன்னிடமே இது கரை சேருகிறது.
No comments:
Post a Comment