இந்த இரவின்
இதழின் எல்லையை
கடந்து
எல்லாமே
வேண்டும்
எல்லாவுமாக
நீ எனக்கு
கிடைக்கும் போது.. 971
இவ்விரவில்
கரையும் மையில்
காகிதம் மட்டும் அல்ல
என் காதலும்
நிரம்புகிறது
உன் கண்களை நினைத்து.. 972
மொழிகள் அற்று
ரகசியம் பேசும்
நம் விழிகளை
நினைத்து
காதலும்
காலமும்
சிந்தித்துக் கொண்டு
தான் இருக்கிறது... 973
இழந்த
காலங்களிலும்
இழந்த
நம் காதல் காலங்களையும்
இன்னும்
இழந்து கொண்டு தான்
இருக்கிறது
காதலின் காலமும்
காலத்தின் மீதான காதலும்.. 974
வழி தேடும்
குருடனை போல
நீ
இல்லாமலும்
இந்த இரவில்
உன் இதழை தேடுகிறேன்... 975
தனிமையில்
கோப்பையை நிரப்பிய
தேநீரின் வழியே
உன் நினைவுகளை
என் நெஞ்சில்
இறக்குகிறேன்
என் அன்பே!! 976
எந்தவொரு
வார்த்தையும்
உன்னை சுலபமாக
அழகாக்கி விடுகிறது
என் கவிதையின் வழியே!! 977
என்னை நேசித்து
ஒரு சிலுவை அல்ல
ஓராயிரம்
சிலுவைகளை
உன் மனதில் சுமந்து
கொண்டு இருக்கிறாய்!! 978
உன்னை நினைத்து
அழுது கொள்ள
நிச்சயம்
இந்த இரவு
தேவைப்பட தான் செய்கிறது.. 979
அந்தி நேர மழை
உன்னை ஞாபகப் படுத்துகிறது
இந்த உலகில்
உன்னை ஞாபகப் படுத்தாத
மழை ஒரு போதும்
மழையாகாது... 980
No comments:
Post a Comment