விதிகளை எண்ணி
விழித்திருந்தால்
விழியின் வழியே
ஓர் முத்தமிடுகிறாய்.. 901
துயர் நிறைந்த
காலங்களை நான்
கடக்க நினைக்கும்
போதெல்லாம்
துணையாய் எப்போதும்
இருக்கிறது
உன் விழிகளும்
உன் விழி தந்த
முத்தங்களும்... 902
நீ
என்னை கடக்கும் முன்னே
நான் உன்னை
கடத்தி விடுகிறேன்
விழியின் முத்தத்தின் வழியே.. 903
ஆர்வம் மிகுந்த
என் கனவுகளை எல்லாம்
அபூர்வமாய் கடந்து விடுகிறது
உன் காதல்... 904
நம் இரு
உயிர்கள் உறங்கும் போது
உள்ளமும்
இதயமும் உன்னையே
தேடிக் கழிக்கிறது
இந்த இரவை... 905
நான் வணங்கிய
கடவுளும் வருத்தப் படுகிறது
உன்னோடு காணாததால்.. 906
அந்தரங்க
இரவுகளில்
என்றுமே நான்
உந்தன் காதலின் அடிமை.. 907
உன் முத்த இசையின்
தாக்கத்தில்
தாவி தாவி குதிக்கிறது
என் மனம்
இரவுகளை கடந்து
பகலிலும்.... 908
மின்னலின் வெளிச்சம்
உன் மென் இதழின்
வாசம் கூட்டுகிறது
யாரமற்ற மழையில்.. 909
பனி உருகி உருகி
வழியும் மழையில்
என் பணி இனிதே
பெருகுகிறது
உன் இதழில்... 910
No comments:
Post a Comment