உயிர் பூக்கும்
செடியில்
உயிர் இருக்கிறது
என்பதற்கு சாட்சி
பூக்கும் பூக்கள்
என்னில்
உன் காதல்..... 981
என்
முதல் கவிதை
உன் கண்களை
பார்த்து தான்
நான்
நகல் எடுத்தேன்... 982
உன்
கையெழுத்துக்காக
காத்திருக்கும்
உயில்கள் தான்
என் கவிதைகள்... 983
எங்கே
இருக்கிறது என்று
தேடித் தேடிப் பார்த்தேன்
நான்
தேடிய அனைத்தும்
நீ
உன் விழிக்குள்
பதிக்கி வைத்து
உன்னையே தேடிக்
கொண்டு இருந்தாய்... 984
உன்னைப் பிரிந்த
கணமொன்றில்
என்னால்
எழுதப்படும் கவிதை
கவிதை அல்ல
நம்
கண்ணீரின் பிம்பம்... 985
எத்தனை பாகமாய்
உன் காதலை
பிரித்தாலும்
அத்தனை பாகத்திலும்
முதல் பாகம்
உன் முத்தம்... 986
வெளியேறும்
நினைவின் வழி
நிம்மதி கூடிய
ஓர் உறக்கம்
உன்னை நினைத்து... 987
இப்போதெல்லாம்
என் உடம்பில்
ரத்தம் ஊறுவதற்கு
பதில்
உன்னைப் பற்றிய
ஓர் கவிதை ஊறுகிறது... 988
என்னோடு
இருக்கும் இரவில்
உன் கண்கள்
சொல்லும் வார்த்தைகளை
கவிதையாக்க
முயற்சித்துக் கொண்டு
இருக்கிறேன்.... 989
கவிதை தோன்றாத
கணங்களில்
கண்களிலும்
கனவுகளில்
கண்ணீரே வடிகிறது... 990
No comments:
Post a Comment