அழுவதற்கு கூட
நீ
தேடும் இடம்
என் மடி என்றால்
நானும் எப்படி
உனக்கு முன்னால்
இறந்துவிட முடியும்!
இருந்தும்
அவ்வப்போது
நினைக்கிறேன் இறந்துவிட!! 951
குழப்பத்தில் கூட
குவிகிறது
உன்னைப் பற்றிய
கவிதைகள்
குழப்பமில்லாமல்
நான் உன்னை மட்டுமே
காதலிப்பதால்.... 952
என்னில்
உணர்வுகள் இருக்கிறது
உயிர் மட்டும்
இப்போது அல்ல
எப்போதும் என்னோடு
இல்லை என்பதே
என் உணர்வு.. 953
என்றைக்கும்
என்னில் இருக்கும்
கவிதை நீ!
வார்த்தைகள் அற்று!! 954
உன் மெளனம்
ஒரு கவிதை என்றால்
உன் மனம்
இன்னொரு கவிதை
என் காதலுக்கு... 955
செவிகள் மட்டும்
எனக்கு கேட்காமலிருந்தால்
நான்
எப்போதும்
உன் இதழை
ரசித்துக் கொண்டு
இருந்திருப்பேன் அல்லவா? 956
உன் உடலைத் தேடும்
எல்லா இரவுகளிலும்
நான் என்னையே
தேடிக் கொண்டு இருக்கிறேன்
கனவுகளின்
ஒரு பக்க விளிம்புகளில்
இருந்து.... 957
நீளம் குறைந்த
கனவில் கூட
நில்லாமல் வெளியேறுகிறது
நம் காமம்... 958
கனவுகளுக்கும்
காலக் கெடு
இருந்திருந்தால்
நானும் எரிந்தே
போயிருப்பேன்
காகிதத்தின்
ஒரு துளி தீப்பொறியில்.. 959
நெஞ்சை நிரப்பிய
உன் அன்புகள் எல்லாம்
இப்போது
காலத்தின் மீதமாக
கண்களை நிரப்புகிறது
கண்ணீராக!! 960
No comments:
Post a Comment