மேனியெங்கும்
வெட்கம் சூடி
வெட்கத்தில் நானே
உன்னை சூழ்வேன்... 891
சுதந்திர அறையில்
சுகமாய் ஓர்
முத்தம் சுவற்றில்
உன்னை சாய்த்து... 892
தொட்டிலில்
உன்னை இட்டு
என் கவிதைகளை
தாலாட்டாய் நான் பாடுவேன்.. 893
அந்தி நேர
ராகம் நிரம்பிய
பாடல்
உன் முத்தம்... 894
இடைவெளி அற்று
நீ அமரும் இடம்
என் மடியிலும்
என் மனதிலும்.. 895
நீ சங்கீதம்
ரசித்து பாடும் போது
நானும் உன்னோடு
ரசிப்பேன்
உன் இதழின்
அசைவுகளை மட்டும்.. 896
அறை முழுதும்
நீ ஆடிய படி
சுற்றி வர
நான் உன்னையே
சுற்றி வருவேன்
கனவில் கூட... 897
இன்பம் நிறைந்த
கனவின் முடிவில்
இன்பமான ஓர் முத்தம்
கனவின் வழியே
நானும் அனுப்புவேன்
நீ உறங்கும் போது.. 898
நீ இன்றி
இருக்கும் அறையில்
உன் நினைவாக
உன் முத்தத்தை
பரப்பி வைத்து
பாதுகாப்பேன்... 899
வெண்ணிற ஆடையில்
நீ ஆடும் போது
வேண்டுமென்றே
நான் கொடுப்பேன்
வெண்ணிற முத்தம்
ஓர் பனித்துளி போல
உன் வேர்வையின் வழியே!! 900
No comments:
Post a Comment