June 2, 2015

2015 கவிதைகள் 921 to 930

இதயத்தோடு
என் இதழும்
உன்னையே எதிர்பார்த்து
காத்திருக்கிறது .....    921

என் காதலின் சிறையில்
தூக்கு தண்டனைக்கு பதில்
உன்னைத் தூக்கி
முத்த தண்டனை
நிறைவேற்ற ஆசை...    922

குறையும் ஆடையில்
நிறையும் உந்தன் முத்தம்.. 923

ஒரு பெரு மழைக்கு
உதாரணம்
நில்லாது நீ கொடுக்கும்
ஒரு முத்தம்...        924

உடையும்
மழைத்துளி தான்
நீயும்
உன் உடைகளை
களைந்த போது...  925

உன்னுடனான
இரவின் நினைப்புகளை
உன் முத்தங்களே
நிரப்பி விடுகிறது....  926

ஊடல் பின் காதல்
நிறைய
உள்ளத்தில் காதலின்
உள் சக்தி இன்னும்
ஊற்றாக உயருகிறது...  927

உன்னோடு
ஒர் இரவு
பகல் என்றால்
ஒரு பகல்
இன்னொரு இரவு ......     928      

மீனைப் பற்றி
ஒரு கவிதை எழுத
நினைத்த போது
என்னில் மீதம் இருக்கும்
உன் காதலே நீந்துகிறது
காதல் கடலில் மீனாக ...   929

இரவில்
உன்னை நினைப்பது போய்
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
என் உலகம் இரவாக
என்னை சூழ்ந்து விடுகிறது.. 930

No comments:

Post a Comment