மழையின் வாசம்
வீச தொடங்கியதும்
உன் இதழின் நேசம்
என்னில் கூட
தொடங்கிவிடுகிறது.. 911
இந்த மழையில்
உன் இதழை வாசித்து
கொண்டு இருக்கிறேன்
இன்னும் ஓர் கவிதை
எழுதி விடுவதற்கு... 912
உன் விரல் தரும் கவிதையே
அழகு என்னில்
வார்த்தைகளை தேடி
தேடி அமைத்த பிறகு... 913
உன்னோடு முடியும்
இரவில்
என் இதழ் ஓர்
அழகான கவிதை
இதமாய் உன் வரிகளோடு
நான் கண்ணாடியில்
வாசிக்கும் போது... 914
மல்லிகை வாசம்
வீசும் என் கவிதையில்
உன் கூந்தல் முடி
ஒன்று தான் வரி.... 915
மெல்லிய மழையில்
மேகம் பாடும் பாடலில்
உன் மெல்லிடை
மெல்ல மெல்ல
ஆடுகிறது என் இரவின்
கண்களில்.... 916
முத்தமே பொழியும்
இரவின் மழையில்... 917
உன் கண்களில்
கவிதை வாசித்தேன்
உன் கவிதையால்
உன்னை நேசித்தேன்
உன்னை நேசித்து
இப்போது நானும்
சுவாசிக்கிறேன்
உன்னையே ஓர்
கவிதையாக.... 918
பல இசையை கடந்து
இன்னும் எனக்கு
இன்பம் தருகிறது
உன் இதழ்
முத்தத்தின் ஓசை... 919
உறங்கும் முன்
கண்களில்
உன்னை நினைத்தேன்
உறங்கிய பின்
இமைகளில்
உன் அனைத்தேன்... 920
No comments:
Post a Comment