June 12, 2015

2015 கவிதைகள் 961 to 970

எதன் பொருட்டு
நான் வாழ்கிறேன்
வாழ்க்கையின் எல்லா
நிகழ்வுகளையும்
உன் கண்களின் மீது
நான் வைத்து,
ஒரு கனமேனும்
நானும் சிந்திக்கிறேன்
உன் ஒரு துளி
கண்ணீரைப் பற்றி...  961

எனக்காக
நீ காத்திருப்பது
தூக்கம் வரும் இரவில்
தூங்காமல் அதை
கடப்பதற்கு சமம்....  962

என்னை நினைத்து
அழும் போது
என்ன காரணம் தான்
சொல்லி இருப்பாய்
உன் தாயிடம்.... 963

இழக்க கூடாதென்று
இப்பொழுது
எண்ணிக் கொள்கிறேன்
உன் இதழ் முத்தத்தை... 964

இந்த வீட்டின்
எல்லா அறைகளிலும்
உன் காதல்
கலந்து இருக்கிறது
இருந்தும்
என்னால் இந்த இரவை
மட்டும்
கடக்க முடிவதில்லை...   965

உன் உடலை அனைத்த
சோபாக்களும்
வெகு சோர்வு அடைந்து விட்டது
உன்னை வெகு நாட்களாய்
எதிர்பார்த்து எதிர்பார்த்து... 966

பயணங்களில்
ஜன்னலின் வழியே
எதிர் வரும்
உன் நினைவுகள் தான்
என்னை கடந்து வந்த
பாதையெங்கும்
சிரிக்க வைக்கிறது....  967

கனவில்
காதலும்
காதலில்
கனவும் இருக்கிறது.... 968

உன் முத்தத்தில்
என் வேர்வை பெருக்கி
உன்னோடே
இரு முத்த குளியல்
மீண்டும் வேண்டும்..  969

முகம் பார்க்கும் போது
உன் முத்தத்தை
எதிர் பார்த்து
என்னையும்
என் இதழையும்
சரி பார்த்துக் கொள்கிறேன்
உன்னையே
என் வீட்டு கன்ணாடியாக்கி... 970

No comments:

Post a Comment