June 12, 2015

2015 கவிதைகள் 941 to 950

நீ
அமர்ந்திருந்த இடத்தில்
உன் கை ரேகையை தேடி
என் கை விரல்
ரேகையை கோர்த்தேன்
யாரும் இல்லாத போது
இத்தரையில்
மெல்ல மெல்ல
என் இதழையும் பதித்தேன்..  941

உருகி வழியும் காதலில்
ஒருபோதும்
உயிர்கள் உறங்குவதில்லை
மாறாக
உயிர்கள் ஏங்குகிறது...   942

காற்றை சுவாசிக்கும்
ஜன்னலின் வழியே
என் காதல்
மெல்ல மெல்ல
வெளியேறுகிறது
உன்னையே நோக்கி...  943

இரவில் மூடப்பட
வேண்டிய ஜன்னல்
உன் இதழால்
இப்போதே மூடப்படுகிறது.. 944

உன் முத்தத்தால்
நிரந்தர ஆனியை
அடித்தால் என்ன?
இந்த ஜன்னலுக்கு...  945

உயிரற்ற
என் உடலில்
காமம் உயிராக
உயிர்த்தெழுந்து
என்னை இயங்க
வைக்கிறது
என் ஒவ்வொரு இரவிலும்.. 946

கண்ணீரின்
ஒரு சுவடும் இல்லை
சுதந்திர கவிதை ஒன்று
பிறந்த தினத்தில் இருந்து.. 947

எப்போது மாறியது
என் கவிதையின்
வண்ணங்கள்
இப்போது படிக்கும் போது
கண்ணீர் மட்டுமே
வருகிறது வரிகளாக..   948

நீ புலம்பும் போது
நானும் புத்தன் ஆனேன்
மெளனத்தில் திளைத்து
மெளனமாக என்னிலிருந்த
ஒவ்வொரு ஆசைகளையும்
களைத்த போது...   949

உன்னில்
எதைத் தேடிச் சென்றாலும்
உன் காதலே
என் கைகளுக்கு
கிடைக்கிறது...  950

No comments:

Post a Comment