பகல் நேர
நம் நிழல்கள்
இணைந்து இன்னொரு
இரவை தேடி ஓடுகிறது
என் இதழும்
உன் இதழை தேடி... 931
என்னையே ஆடையாக
ஆடை அணியும்
கலை உன்னிலே
நானும் கண்டேன்... 932
உன் முத்தம் தேடி
ஓடி களைத்தேன்
இந்த இரவில்
இருந்தும் முத்தத்தின்
நடுவே இருளாக
இருக்க வைத்தாய்
இந்த இரவை.... 933
உன்னை தேடுவதை விட
என் மனம்
உன் குரலை நாடுகிறது
இவ்விரவில்.... 934
எழுதி முடித்த
என் கவிதையில்
ஒரு வரியை
எழுதாமல்
விட்டு வைத்திருக்கிறேன்
உன்னோடு மட்டும்
எழுதிக் கொள்வதற்கு.. 935
நானும் நீயும்
இரவில் தூங்கலாம்
ஆனால்
நம் கனவுகள்
ஒருபோதும்
தூங்குவதில்லை
நம்மை தூங்க
விடுவதுமில்லை.... 936
உன்னைத்
தேடி அலையும்
பாதைகளில்
என் பாதங்கள்
ஒரு போதும் வலிப்பதில்லை
உன் பார்வைகளை
என்னில்
நான் வேர்வையாக
வழிய விடும் போது... 937
எப்படியும் இறந்து விட
போகிற என் உயிரில்
எப்போதும்
காதல் இருக்கிறது.. 938
உனக்காகவும்
உன் கவிதைக்காகவும்
காத்திருந்த வேலையின்
முடிவில்
ஓர் முத்தம் சாத்தியம்... 939
கன மழையில்
காகிதம் நிரம்புகிறது
உன் முத்தத்தின் துளியாய்
கவிதையாக.. 940
No comments:
Post a Comment