உன்
காதோரம்
தலை முடி ஒதுக்கி
என் கை விரலால்
வரையப்பட்ட கோட்டில்
உன் முகம்
ஓவியமாக
புன்னகை புரிகிறது... 991
வெளி செல்லும்
போதெல்லாம்
வேதனையில்
என் முகம் வாடுகிறது
எப்போது
உன்னைப் பார்ப்பேன்
என்று நினைத்தப் படி... 992
என்னுடல்
தேடுவது
உன்னுடலை அல்ல
அதிகபட்சம் போனால்
ஒரே ஒரு முத்தம்... 993
மெல்லன பாயும்
மல்லிகை வாசனையில்
வாசலிலே
உன்னைப் பற்றி
சிந்தித்து நிற்பேன்
என்னை
சந்தித்து
என்னுடலை
வரவேற்று
தன்னுடலை
தன்னிலிருந்து
நீ
எடுத்து
என்னிலே
பரவ விடுவாய்
மல்லிகை வாசம்
போய்
உன் இதழின்
ரோஜா வாசம்
என் இதழிலும்
என் இதயத்திலும்
வீசிக் கொள்ள.... 994
அறையெங்கும்
அமைதி பரப்பி
உன் முத்தத்தின்
ஒலியை மட்டுமே
கேட்கச் செய்வேன்
இந்த தாழிடப்பட்ட
மழையில்...... 995
எத்தனை
கவிதை
எழுதி இருக்கிறேன்
என்று
ஒரு கணக்கு
வைத்திருக்கிறேன்
அது
அத்தனையும்
முத்தமாக
உன்னிடமிருந்து
பெற்றுக் கொள்ள.... 996
உன் மார்பு வீங்கி
என் இரவு
நீண்டு விட்டது
நான் பெண்ணாக
நீ ஆணாக
பிறந்திருந்தால் என்ன? 997
நீ
வந்த பின்னும்
வா!!
என்று அழைக்கிறது
என் இதழ்!!! 998
இப்பொழுது
கண்ணீர் வடிகிறது
ஒரே ஒரு
கவிதை
எழுதிக் கொள்ளட்டுமா? 999
இனி
நிம்மதியாக
என் உயிர் பி(பு)ரியலாம்.. 1000
No comments:
Post a Comment