April 16, 2015

யோசனை

நம் வாழ்க்கையில் உலக உருண்டை ஒழுங்காக சுழன்று இருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? இருந்திருக்க கூடும்? என்று ஒரு யோசனை.

பலரின் யோசனைகளை பல நேரங்களில் நான் உதாசினப்படுத்தி இருக்கிறேன். ஆனால் பின்னால் பலமாக யோசித்து இருக்கிறேன். யோசனை என்பது என்னை பொறுத்த வரை ஒரு கற்பனை.

கற்பனை என்பதில் ஒரு சில நேரம் பெரும் பொய்யாகவும், கற்பனைக்கு மீறின உண்மையாகவும் இருக்கும். இதில் நான் சொல்ல போகும் சம்பவமும் ஒரு கற்பனை தான். வெறும் கனவுகள் தான். கனவு என்ன வந்தது என்று காலையில் ஒரு சிலருக்கு மட்டுமே ஞாபகம் இருக்கும் அதுபோல தான் இதுவும் ஒரு வித்தியாசமான ஒரு காதல் கற்பனை.

" மாங்கல்யம் தந்துனானே" என்று சாஸ்திர சம்பிரதாயங்கள் இல்லாமல் ஏதோவொரு கோவில் வாசலில் நான் உனக்கு கட்டியது வெறும் தாலி தானா? என் தவிப்புகள் அனைத்தையும் மூன்று முடுச்சுக்குள் அடக்கி விட முடியுமா? உன்னை எப்படி வைத்து காப்பாற்றுவேன்? உன்னை கண் கலங்கவிடாமல் வைத்து இருப்பேனா? என்று பல யோசனையோடு நான் கட்டியது வெறும் தாலி தானா? நீயே சொல்.

என்னை அளவுக்கு மீறி காதலித்து என் கரம் பிடித்தாய். என்னால் உனக்கு என்ன கொடுத்துவிட முடியும். காலை வேலைகளை எனக்காக தொடங்கி மாலை வரை வீட்டு  வேலைகளுடன் மன்றாடும் உனக்கு என்னால் என்ன தந்து விட முடியும் என்று பல முறை யோசிக்கிறேன். நான் பருகி காலி செய்த காபி டம்ளர் முதல் இரவு நான் உடுத்தி கசக்கிய கைலியையும் வெளுத்து விட்டு, வீட்டையும் பராமரிக்கும் உனக்காக நான் என்ன செய்துவிட முடியும் என்று யோசிக்கிறேன். 

யோசனை என்பதே என் வாழ்வின் பெரும் பகுதி. ஆனால் நான் இப்பொழுது யோசிப்பது உன்னைப் பற்றி மட்டுமே.

என் உடல் சேர்ந்து, சோர்ந்து போய் நீ கிடக்கும் வேலையிலே, நான் ஆபிஸில் வேலைகளை கவனித்து கொண்டு இருப்பேன். நிஜம் உன் உள்ளத்தை பற்றிக் கொள்ள ஆசை இருக்கும். உன் தோள்களை மிருதுவாக வருடிவிட ஆசை இருக்கும். இங்கே எனக்கு வேலையும் இருக்கும். வேலை வேண்டாத வேலை செய்துவிட்டமோ என்றே எண்ணம் போகும்.

ஆணின் மனம் எப்படிப் பட்டது என்பது எனக்கும் தெரியும். வெறுமனே விஷயங்கள் தெரிந்தும் தெரியாதது போல சூழ்நிலை சூழ்ந்து கொள்கிற மனம் தான் ஆண் மனம். ஆனால் நான் வெறும் ஆண் மகனாக இருக்க விரும்பவில்லை. உனக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும். உன் மனம் கோனமல் உன்னிடம் அதிகம் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைத்தும் மெளனமாகவே. உன் ஒற்றை பார்வையின் அர்த்தம் எனக்கு மட்டுமே புரிய வேண்டும்.

நான் சொல்வதை கவனமாக கேள். நானும் ஒரு சராசரி மனிதன் தான். ஆனால் என்னை மீறி நான் செய்யும் செயல்கள் உன்னை காயப்படுத்தினால் நிச்சயமாக உளறி விடு. நான்  உதறிவிடுகிறேன். நம் உலகத்தில் எனக்காக ஒன்றை மட்டும் தெரிந்து கொள். உனக்காக நான் எதையும் என்னில் இருந்து இழக்கவில்லை. மாறாக நான் ஒரு சிறு குழந்தையாக மறுகனம் பிறக்கிறேன். நீ தான் தாய்

-Sun Muga-
14-02-2014

No comments:

Post a Comment