என்னை விட
என் தேவதை
அழகாக
கவிதை எழுதுகிறாள்
என் கன்னங்களில்... 601
நீ
என் இதழில்
பாட தொடங்கியதுமே
நான்
என் கண்களை மூடி
ரசிக்க தொடங்க விடுகிறேன்.. 602
முழுமையடைந்த
இரவில்
நீ
உன் உடையை
களைவதை போல தான்
நான்
என்னிலிருந்து
என் காதலை களைக்கிறேன்
முழுமையடைந்த
ஓர் கவிதையை எழுத... 603
தூரங்கள் இருந்தாலும்
நேரங்கள் கழிந்தாலும்
நீயே
என்னை நெருங்கி இருக்கிறாய்
என் மடியில் தவழ்ந்த படி... 604
மேகத் தீ
குறையும் போது
மோகத் தீ
எரிகிறது
இந்த காதல் உடலில்.. 605
என்னிலிருந்து
பிறக்கும்
எந்த கேள்விக்கும்
பதில்- உன் முத்தம்.... 606
உன் இருப்பை
என்னுள் உணர்ந்தே
என்னுள் பிறக்கிறது
இந்த காதல் கவிதை... 607
உன்
ஒரே ஒரு
தொடுதல் போதும்
என்னை நீ தேடும்
கவிதை நான் எழுத... 608
வேகம் கூடிய காற்றை போல
நேற்றே
நான் உணர்ந்தேன்
காமம் கூடிய ஓர் காதலை
அந்த இரவுக் காற்றில்... 609
நீ
இன்று சரியில்லை-என்றே
என்னை
சரி படுத்துகிறாய்
உன் இதழால்.... 610
No comments:
Post a Comment