April 18, 2015

2015 கவிதைகள் 631 to 640

அழகு நிரம்பிய
இக் காதல் உலகில்
அழகி நீ மட்டுமே
அழகன் நான் மட்டுமே
அழகு நம் காதல் மட்டுமே.. 631

அந்தி நேர
வேர்வை மழையை பருகி
அதிகாலை இச்சூரியன்
எழுகிறான்
அதிகமான காதலின்
சந்தோசத்தோடு
ஆச்சரியம் மிகுந்த
கண்களை தடவிய படி
உன் கால்களை
மெல்ல மெல்ல
வருடிய படி....      632

இரவுகள்
இல்லாத போதும்
முத்தம் இருக்கிறது
ஏன்
முத்தமே இரவாக இருக்கிறது
நம் இருவரும்
கண்களை மூடும் போது... 633

என்ன செய்யப்
போகிறாய்?
அர்த்த ராத்திரியில்
அர்த்தம் மிகுந்த
சந்தோசத்தோடு
பொழியும் இந்த
மழையின் குளிரில்!!
குளிரோடு கூடும்
இந்த வெப்பத்தில்... 634

என்னிலிருந்து
என் உயிரை எடுத்து
உன் இதழில் பதிப்பேன்
இரவின் ஒளியில்
உன் உயிரையும் காத்து... 635

என் வார்த்தைகளை
நீ வாசித்தால்
அவை வார்த்தைகள்
அதையே
நீ நேசித்தால்
அது கவிதைகள்...        636

ஒளி கூடிய
வைரக் கற்கள் போல தான்
உன் பார்வையின்
ஒளியில்
ஒளிர்கிறது
என் காதல் கவிதைகள்...  637

உன் காதல் புத்தகத்தை
எழுதியவனும் நான்
வாசித்தவனும் நான்
ரசித்தவனும் நான்
ருசிப்பது மட்டும் நீ....       638

கொடுப்பதும்
பெறுவதும்
நான் அல்லவா?

கொடுப்பதிலிருந்தும்
பெறுவதில் இருந்தும்
என்னிலிருந்து
வேறுபட்டு இருப்பது
நீ அல்லவா?

கொடுப்பதை
அள்ளி கொடுத்து
பெறுவதை
என்னை
கிள்ளி பெற்று
சந்தோச தோனியில்
நீ சிரிக்கும் போது...    639

உன்
மெல்லிய உடலின்
சித்திரங்களை
சீக்கிரமே வரைந்து
முடித்து விடுகிறேன்
என் கண்களின் வழி
கனவின் வண்ணங்களை தீட்டி... 640

No comments:

Post a Comment