April 19, 2015

2015 கவிதைகள் 661 to 670

வீணாக்கிய
விடுமுறை நாட்கள் எல்லாம்
என் விதி என்று
மதி உரைக்கிறது
இன்று மதியம் வரை
உன்னோடு அமர்ந்த போது... 661

பொய் சொல்லும்
உன் புருவங்கள்
தள்ளி போ என்று !!
மெய் சொல்லும்
உன் கண்களை
பார்த்தபடி
என் கை செல்லும்
உன் இடையினில்
மெல்ல ல்ல ல
முத்தமிடு என்று
மெய் சொல்லுகிறது
உன் புருவங்கள்...    662

எட்டு திசைகளையும்
மீறி
நான் உன்னை
திரும்பி பார்க்கிறேன்
உன் காதலின் விசையால்
மெல்ல மெல்ல
உன் இதழின் இசையால்
என்னை நீ இசைக்கும் போது.... 663

மிக குறுகிய
பாதையே வேண்டும்
நீயும் நானும்
பயணிக்கும் போது
மெல்ல மெல்ல
நம் தோள்கள்
உரசிக் கொள்ள....   664

தேன் கலந்த
தென்றல் வாசனை
உன் கூந்தல் வாசனை....  665

காதல்
ஒளி விரியும்
இக் கண்களில்
மீண்டும்
நான் எப்போது
ஒளி கொடுக்க முடியும்
என் இதழின் வழி....     666

நீண்ட மென் சாரலில்
உன் சரிதம் தேடும்
மென் இதழ்
என் இதழ்....     667

ஆண் என்று
என்னை நினைத்து
உன்னை அனைத்தேன்
நீயே ஆணாக மாறி
என்னை பெண்ணாக
மாற்றினாய்
ஒவ்வொரு அனைப்பின்
முடிவிலும்..      668

இதழ் கொஞ்சும்
என் தேன் இதழில்
மெல்ல உதிரும்
பூ போல
வெட்கம் உதிரும்
வெட்கமற்ற இரவில்....  669

தெய்வங்கள் வாழ்த்தும்
தேவதை
என்னை நெருங்கும் போது
வேதனை கண்ட நாட்கள் எல்லாம்
வேர்வையில் தீரும் போதும்..  670

No comments:

Post a Comment