சோகம் தீரும்
சோர்வும் தீரும்
சேலையில்
என் தேவதை
என்னில் தரும் முத்தத்தால்.. 611
உயிர்த்தெழும் புற்களில்
பூக்களாக பனித்துளி
நம் காதலை போல... 612
உயிர்த்தெழும் புற்களில்
பூக்கள் இல்லை
இருந்தும்
பசுமை இருக்கிறது
நம் காதலைப் போல... 613
என்னை நாடி வந்த
வார்த்தைகள் எல்லாம்
கவிதைகள்
நான் உன் இதழை
நாடி வந்த பிறகு தான்... 614
அளவான பற்றோடு
அதிகமாய் முத்தம் இடுகிறாய்
அடுக்கி வைத்த
புத்தகம் போல... 615
மெளனமாய்
நீ பேசும் இந்நேரத்தில்
மெளனங்களை கடந்து
மெளனமே பேசிக்
கொண்டு இருக்கிறது
உன் இதழ் வழி... 616
வளையல் குலுங்கும்
போதெல்லாம்
உன் முத்தத்தின்
இசையே கேட்கிறது
என் கைகளுக்கு... 617
உன் மேனி
உரசி உரசி
என் மேனி
கலர் (கருப்பாக)மாறுகிறது
காலையில்
நான் எழும் போது... 618
ஏதோ ஒரு
அழகு இருக்கத் தான்
செய்கிறது
உன் செவிகளுக்கும்
அதான்
தானாகவே வேலை
செய்கிறது என் இதழ் அதனுள்.. 619
இன்றென்னும்
இன்பத் தேரில்
உலா வரும்
அழகு தேவதை நீ
காதலின் பாதையில்... 620
No comments:
Post a Comment