என் வலிகளை
மீறிய
வழி -உன் இதழ்... 651
ஏன்
இந்த காதல் பாதையை
என்னோடு நீயும்
தேர்ந்தெடுத்தாய்?
ஏன்
தெளிவாய்
என் கைகளையும்
தேர்ந்தெடுத்தாய்? 652
காமம் கிளித்தெறியும்
உடலைக் கொண்டு
உன்னை நான்
நெருங்கினால்
காதலோடு
என்னை கிள்ளி
அனைக்கிறாய் நீ!! 653
காதலில்
நீ சொல்லும்
வழிமுறைகளை
பின் பற்றுகிறேன்
வழிமுறையை மீறி
காமத்தையும்
பின் பற்ற செய்கிறேன்... 654
நம் வீட்டின்
நடு அறையில்
நடுக்கம் மிகுந்த
உன் முதல் முத்தம்
நிறைந்து இருக்கிறது..... 655
உன்னை விட்டு
பிரிந்து இருக்கும்
இவ்விரவை
பலமான என் கைகள்
கொண்டு தள்ளி விடுகிறேன்
தனிமையில்
கண்ணீரும் விடுகிறேன்... 656
என்
அர்த்தமற்ற ஆயிரம்
கவிதைகளுக்கும்
அர்த்தம் நீ மட்டுமே!!! 657
எந்த கனவிலோ
நடந்தது
நடந்த நிகழ்வு
இப்போது நிகழ்கிறது
நம் இரு நிழல்கள்
நின்று அதையே
ரசிக்கிறது.... 658
நேர் நேராய்
கூர் கூராய்
நீ
என்னைப் பார்க்கும் போது
கூத்தாடும் குடம் போல
என் இதயம் துடிக்கிறது
உன் இடையின்
அசைவிற்கு ஏற்றார்போல.. 659
என் வீட்டிலிருந்து
பலம் கொண்டு
இப்பகலை
நான் தள்ளி விடுகிறேன்
இரவாக
நீ என்னில் நிறைவாய்
என்ற அதிக சந்தோசத்தில்... 660
No comments:
Post a Comment