விளக்கை ஏற்றிவிட்டு
முடிவில்
உன்னை குளிர்விப்பேன்
என்னில் வேர்வைகள்
தீரும் போது... 621
வானத்தின்
மின்னலின் கீறல் போல
என்னில்
உன் நகக் கீறல்
பதிய வேண்டும்... 622
கடற்கரையில்
மண்ணைத் தோண்டி
உள்ளே
நுழையும் சிறு நண்டைப் போல
உன் காதலை தோண்டி
உன் இதழுக்குள் நுழைகிறேன்
உன் பெரு முத்தத்திற்காக.. 623
நீ இல்லாமலும்
பதிகிறது
உன் காலடி தடம்
இந்த கடற்கரை மணலில்
உன் நினைவின் வழியே.. 624
கையில் கோர்த்து
அள்ளி விடும் போது
தூறும் மணலை போல
என்னில் உதிர்கிறது
ஒர் கண்ணீர் துளி
உந்தன் பிரிவால்... 625
வீசும் கடல் அலைகளில்
ஒலிக்கிறது
நம் இருவரும்
கொஞ்சிப் பேசிய
வார்த்தைகள்... 626
கட்டிய சுவருக்குள்
சுதந்திரமாக
சுற்றித் திரிகிறது
உன் காதல்
என் கவிதைக்குள்... 627
நிழல்கள் அற்ற
ஒர் இடத்தில்
நிம்மதியான உறக்கம்
எதுவென்றால்
அது உன்னோடு
நான் உறங்கும்போது
மட்டும் தான்.. 628
நீயே
என் நிழல்கள்
நீ
என்னோடு இல்லாத போதும்
என்
இதழாக ஒளி கூடும் போதும்.. 629
உன்
நீண்ட கூந்தலின்
நுனியில்
எப்போதும் இருக்கிறது
பூவாக என் இதழ்கள்.. 630
No comments:
Post a Comment