காகிதம் விரித்து
கண்களை மூடி
கவிதை யோசிக்கிறேன்
கனவை விரித்து
இதழை மூடி
கவிதை எழுதிவிடுகிறேன்.. 531
உடைகளை தவறி கூட
நீ உடுத்தி வருவதில்லை
என் பகல் நேரக் கனவுகளில்
உடைகளை தவற விட்டே
நீ வருகிறாய்
என் இரவு நேர கனவுகளில்... 532
நம் காதல்
சமாதியில் பூக்கிறது
இந்த "முத்த பூ" 533
அர்த்தங்கள் நிறைந்த
அந்தி நேர
அந்தரங்க சிரிப்பில்
ஆயிரம் ஆயிரம்
முத்தங்கள் பதிந்து இருக்கும்
பார்வையில்
மெல்ல மெல்ல
சூடேறி அந்தி
சூரியனையே அது
மூடி இருக்கும்... 534
தேவால சுவர்களில்
எழுதப்படும்
பைபிள் வாசகம் போல
என் காதல் சுவரில்
உன் கவிதைகள்
எழுதப்பட வேண்டும்
என் அன்பே! 535
மேகம் போலவே
உன் தேகம்
மூடுகிறது இந்த
காதல் வானத்தை.. 536
நாழியை கொண்டு
நெல்லை அளந்தேன்
உன் நாணம் கொண்டு
உன் காதலை அளந்தேன்
நாணமற்ற
உன் முத்தத்தின் முடிவில்.. 537
உன் விரல்
தேடும் இசை இது
உன் குரல்
தேடும் பாடல் இது
உன் குரலாக இசையை
தேடும் நான் இது... 538
குடைகள் ஒன்றும்
தேவையில்லை
உன் முத்த மழையில்... 539
பெரும் நீர் வீழ்ச்சி
உன் அழகிய கண்கள்
என் இதழை பிரிந்து
வாழும் இந்த
பாறை மிகுந்த உலகத்தில்.. 540
No comments:
Post a Comment